«  
தேடல்: 1 1

நோபல் பரிசை ஏலத்தில் விற்ற பத்திரிக்கையாளர்

ரஷ்ய நாட்டில் டிமித்ரி முரடோவ் (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் நோவாயாகாஸிடா என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருக்கிறார். அது மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கடந்த 2021-ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த நோபல் பரிசில் அவருக்கு கிடைத்த 3.80 கோடி ரூபாய் பணத்தை முதுகெலும்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு கொடுத்து உதவினார்.

இந்நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடுமையான போர்  நிலவி வருவதால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரினால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். இதன் காரணமாக தனக்கு கிடைத்த தங்கப் பதக்கத்தை டிமித்ரி முரடோவ் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள ஹெரிடேஜ் என்ற நிறுவனத்தின் மூலமாக ஏலத்திற்கு விட்டுள்ளார். அந்த ஏலத்தில் தங்க பதக்கத்திற்கு இந்திய மதிப்பின்படி 808 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

இந்தப் பணத்தை உக்ரைனில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உதவுவதற்கு கொடுக்கப் போவதாக டிமித்ரி முரடோவ் அறிவித்துள்ளார். இந்த பணத்தை ஐநா சபையில் உள்ள மனிதாபிமான நிறுவனமான ஐநா சிறுவர் நிதியத்தில் முரடோவ் வழங்கியுள்ளார். மேலும் அகதி குழந்தைகளுக்கு உதவுவதற்காக தன்னுடைய நோபல் பரிசை ஏலத்தில் விற்ற டிமித்ரி முரடோவை பலர் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க ...

பிரசவத்தில் துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலை

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தை சேர்ந்த 32 வயது கர்ப்பிணி பெண் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவத்திற்காக சென்றிருக்கிறார். அங்கு பெண் மருத்துவர்கள் இல்லாததால் அனுபவம் இல்லாத பணியாளர் ஒருவர் அந்த பெண்ணிற்கு மகப்பேறு சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

அப்போது, குழந்தையை வெளியே எடுத்தபோது அதன் தலை துண்டிக்கப்பட்டு தனியாக வந்துள்ளது. அந்தப் பணியாளர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக குழந்தையின் தலையை மீண்டும் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தையல் போட்டு விட்டார். இதனால் அந்த பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.

உடனே அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு கர்ப்பப் பையில் இருந்த குழந்தையின் உடலை நீக்கி அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். இச்சம்பவத்தில் வேலை நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் இல்லாத மருத்துவர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க ...

கரப்பான் பூச்சிக்கு வந்த வாழ்வை பாருங்க! 30 கரப்பானுக்கு 2,000 டாலர்கள்

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள The Pest Control Company, உங்கள் வீடுகளில் 30 நாட்களுக்கு 100 கரப்பான்பூச்சிகளை விட அனுமதித்தால் 2,000 அமெரிக்க டாலர்கள் (1.5 லட்சம் ரூபாய்) வழங்கப்படும் என அறிவித்து அதற்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

இதன் மூலம் தாங்கள் தயாரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து எப்படி வேலை செய்கிறது என அறிந்துக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த 30 நாட்களுக்குள் தங்களது பூச்சிக்கொல்லியால் கரப்பான்கள் ஒழியவில்லையென்றால் அது தொடர்பான தயாரிப்பை உண்ணிப்பாக மேற்கொள்வோம் எனவும் உறுதியளித்துள்ளது.

இந்த நிறுவனம் விதித்துள்ள விதிமுறைகள்:

சொந்தமாக வீடு வைத்திருக்க வேண்டும் அல்லது வீட்டு உரிமையாளரிடம் இருந்து இதற்கு அனுமதி வாங்கியிருக்க வேண்டும்.

21 வயதை கடந்தவர் ஆக இருக்க வேண்டும்.

யுனைடெட் ஸ்டேட் அமெரிக்காவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

விதிக்கப்பட்ட 30 நாட்களில் வேறு ஒரு கரப்பான் கொல்லிகளை பயன்படுத்த கூடாது.

போட்டி முடிந்த பிறகு கரப்பான்கள் ஒழியாவிட்டால் இலவசமாக உங்கள் வீட்டிலுள்ள கரப்பான்களை பாரம்பரிய முறையில் ஒழித்து விடுவோம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலானது. அமெரிக்காவில் கரப்பான்கள் ஒழிப்பது என்பது சாத்தியமானது அல்ல என பெஸ்ட் கண்ட்ரோம் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் படிக்க ...

  »