ஸ்கார்பரோவில் கத்தியால் குத்தப்பட்ட பெண் - கவலைக்கிடம்!

புதன்கிழமை மாலை ஸ்கார்பரோவில் பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெக்கோவன் வீதிக்கு மேற்கே கிங்ஸ்டன் மற்றும் டோர்செட் சாலைப் பகுதியில் இரவு 9 மணிக்குப் பின்னர் கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்க தாங்கள் வந்ததாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஆபத்தான நிலையில் அதிர்ச்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
கத்திக்குத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.