«  
தேடல்: 4 4

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி மீது நடிகை ஆத்மிகா அதிருப்தி!

இப்போது தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி விருமன் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். அண்மையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடந்தது.நடிகை ஆத்மிகா தனது டுவிட்டர் பக்கத்தில், சிலருக்கு வாய்ப்புகள் ஈஸியாக கிடைத்துவிடுகிறது, மற்றவர்களின் நிலைமை? பாத்துக்கலாம் என பதிவு போட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவிலும் Nepotism அதிகரித்துவிட்டது, ஷங்கர் மகள் அதிதி பற்றி தான் இவர் பதிவு மறைமுகமாக போட்டுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க ...

பெற்ற மகனை அண்ணன் மகன் என கூறிய வடிவேலு!

வடிவேலு  நகைச்சுவை இல்லாத மீம்ஸ்களை சமூக வலைதளத்தில் காண முடியாது. எந்த ஒரு சூழ்நிலைக்கும் அவரின் நகைச்சுவை ரசிகர்களுக்கு பயன்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடிவேலுவை பற்றி அவருடன் நடித்தவரும் இப்போது அவருக்கு எதிராக நிற்பவருமாகிய நடிகர் சிங்கமுத்து சில தகவல்களை கூறினார்.

முதலில் இருவருமே சேர்ந்து நடித்து வந்தனர். சிலபல மனக்கசப்புகளால் இருவருக்கும் ஒரு பெரிட போரே நடந்து சண்டையில் முடிவடைந்திருக்கிறது. சினிமாவில் நடிக்க வருவதற்கு கல்யாணம் ஆகவில்லை. பிள்ளைகள் இல்லை என்றெல்லாம் சொல்ல சொல்லியிருக்கிறாராம் வடிவேலு. ஏனெனில் பிள்ளைகள் இருக்கிறது என்றால் நடிகைகள் நடிக்க வரமாட்டார்கள் என்று கூறுவார்களாம்.


ஒரு சமயம் மலேசியா சென்றிருந்த போது வடிவேலுவுக்கு நான்கு பிள்ளைகளாம். மலேசியா சென்ற போது அவரது மகனை உடன் அழைத்து சென்றாராம். அப்போது எல்லாரிடமும் இது என் அண்ணன் பிள்ளை என்று சொன்னாராம். இந்த வயதில் பிள்ளை இருக்கு என்று தெரிந்தால் மார்க்கெட் போய்விடும் என நினைத்து இப்படி கூறினாராம்.

மேலும் படிக்க ...

கோவம் வந்தால் கை நீட்டுவாரா இந்த நடிகை?

தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா எனும் படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா.

இதனையடுத்து, அடிக்கடி நடிகை ரெஜினாவுக்கு முன்கோபம் வருவதாகவும், அப்போது அவர் சிலரை கைநீட்டி அடிக்கப் பாய்ந்துள்ளதாகவும் செய்திகள் இணையத்தில் வைரலானது. இதற்கு ரெஜினினாவே சமீபத்திய ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார்.

எனக்கு முன் கோபம் வந்தால் என்னை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது. பள்ளி மற்றும் கல்லூரி நாட்களிலும், இப்போது சினிமா துறையில் இருக்கும்போதும் என்னைப் பற்றி தவறாகப் பேசியவர்களை கோபத்தில் கண்டபடி அடித்திருக்கிறேன் ஆனால், சரியான காரணம் இல்லாமல் கோபம் வராது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என பேசியுள்ளார் ரெஜினா.

மேலும் படிக்க ...

  »