«  
தேடல்: 1 1

மகாராணி மரணத்தை தொடர்ந்து வில்லியம்க்கு அடித்த ஜாக்பாட்….!!

பிரித்தானிய ராணியார் மரணத்தை தொடர்ந்து வேல்ஸ் இளவரசர் வில்லியம் வசம் $1.2 பில்லியன் மதிப்புள்ள பழங்கால எஸ்டேட் சென்றுள்ளது. அரச உயில்கள் மற்றும் சொத்துக்கள் ஒருபோதும் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை என்றாலும், நிதி வல்லுனர்கள் அது தொடர்பான தகவல்களை தொடர்ந்து மதிப்பீடு செய்கின்றனர். அந்த வகையில் ராணியார் மரணத்தை தொடர்ந்து Duke of Cambridge என இதுவரை அறியப்பட்டு வந்த இளவரசர் வில்லியம் இனிமுதல் Duke of Cornwall என அறியப்படுவார். அது மட்டுமின்றி, வேல்ஸ் இளவரசர் எனவும் அறியப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி Duke of Cornwall என்ற பட்டத்தை பெற்றுள்ளதால் மூன்றாம் எட்வர்ட் மன்னரால் உருவாக்கப்பட்ட $1.2 பில்லியன் மதிப்புடைய எஸ்டேட் தற்போது வில்லியம் கைக்கு வந்துள்ளது. இதிலிருந்து கிடைக்கும் வருவாய் Duke of Cornwall-ன் பொது, தனியார் மற்றும் தொண்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. தற்போது அந்த பட்டம் வில்லியமிடம் உள்ளதால் பாரம்பரியம் மிக்க எஸ்டேட் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, அவரின் சகோதரரான ஹரிக்கு இதில் எந்தவொரு பங்கும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

மகாராணியார் கிரீடம், ஆண் வாரிசுகள் அணிந்தால் உயிருக்கே ஆபத்து!

அரச குடும்பத்து ஆண்களுக்கு துரதிர்ஷ்டத்தைத் தரும் சபிக்கப்பட்ட கிரீடம் என்றே சிலர் அதை குறிப்பிடுகின்றனர். எலிசபெத் ராணியாரிடமிருந்த பல கிரீடங்களில் ஒன்று தான் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட அந்த கிரீடம். பாரசீக மொழியில் ஒளியின் மலை என வர்ணிக்கப்படும் கோஹினூர் வைரமானது சபிக்கப்பட்ட ஒன்று எனவும் கூறப்படுகின்றது. இந்து துறவி ஒருவரின் கூற்றுப்படி, ஆண் வாரீசு எவரும் அந்த வைரம் பதித்த கிரீடத்தை அணிந்தால் அவர் உலகத்தை சொந்தமாக்கிக் கொள்வார், ஆனால் அதனால் ஏற்படும் அனைத்து துரதிர்ஷ்டங்களையும் அனுபவிக்கவும் நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.

விக்டோரியா ராணியாருக்கு பின்னர் மூன்று பெண்கள் கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை அணிந்துள்ளனர். மேலும், விக்டோரியா ராணியாருக்கு பின்னர் கிரீடமானது, அரச குடும்பத்து உறுப்பினர்கள் அணியும் கிரீடங்களின் பட்டியலிலும் இல்லை. இதனால், கிரீடமானது மன்னர் சார்லஸ் அணிந்து கொள்ள வாய்ப்பில்லை என்றே நம்பப்படுகின்றது. கடைசியாக அந்த கிரீடத்தை அணிந்தவர் முதலாம் எலிசபெத் ராணியார் எனவும், அதுவும் 1953ல் ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் பட்டமளிப்பு விழாவின்போது என்றே கூறப்படுகின்றது. தற்போது அந்த கிரீடமானது மன்னர் சார்லஸின் மனைவி கமிலா அணிய வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளது. கடைசியாக அந்த கிரீடம் 2002-ல் ராணியார் முதலாம் எலிசபெத்தின் சவப்பெட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க ...

மன்னர் கையில் வைத்திருக்கும் பெட்டியின் ரகசியம்?

நாட்டில் மகாராணியார் மரணமடைந்ததை தொடர்ந்து, மன்னராக பதவியேற்ற சார்லஸ், தான் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு பெட்டியை வைத்திருக்கிறார்

அது அனைவரிடமும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் அரண்மனையினுடைய முன்னாள் சமையல்காரராக இருந்த கிரஹாம் நியூபோல்டு இது பற்றி தெரிவித்ததாவது, மன்னர் வைத்திருக்கும் பெட்டியில் அவர் காலை சாப்பிடக்கூடிய சிற்றுண்டி இருக்கும். அதாவது அவர் வீட்டில் செய்யப்பட்ட பிரட், பழ வகைகள், சாறுகள், ஆறு விதமான தேன், உலர் பழங்கள் போன்றவற்றை வழக்கமாக அந்த பெட்டியில் வைத்து எடுத்து செல்வார் என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க ...

  »