«  
தேடல்: 2 2

இதெல்லாம் உனக்கு தேவையா ராசா? அனுபவி!

இங்கிலாந்து நாட்டில் உள்ள அபிங்டன் பகுதியில் எய்டன் ரோவன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5-ம் தேதி ப்ளே ஸ்டேஷனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இரவு 10:30 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் அவர் உடலில் ஏதோ தாக்கியது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. அதன்பின் வாலிபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவரை மின்னல் தாக்கி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மருந்து மாத்திரைகளுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது தொடர்பாக வாலிபர் கூறுகையில், நான் சோபாவில் உட்கார்ந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது வெளியே இடி இடித்துக் கொண்டிருந்தது. அப்போது என்னை திடீரென ஏதோ தாக்கியது போன்று உணர்ந்தேன். அதன்பின் பார்த்தால் என்னுடைய விரலில் தீக்காயங்கள் இருந்தது. மேலும் வாலிபரை மின்னல் தாக்கியதில் அவர்களது இதய துடிப்பு முதலில் ஒழுங்கான நிலையில் இல்லை என்றும், சிறிது நேரம் கழித்து தான் சீரான நிலைக்கு வந்தது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க ...

பிளாஸ்டிக் கழிவுகளை ஆற்றில் வீசிய நடிகைக்கு கண்டனம்!பாகிஸ்தான் நாட்டில் உள்ள திரைப்பட நடிகை ஒருவர் பிளாஸ்டிக் கழிவுகளை ஆற்றில் வீசுவதைக் காட்டும் வீடியோ, இணையத்தில் வைரலாகி பார்வையாளர்களை கோபமடைய செய்துள்ளது. பாகிஸ்தான் திரைப்பட நட்சத்திரம் ரேஷம் என்பவர் பிளாஸ்டிக் பொதியை ஆற்றில் வீசியுள்ளார். இதனால் சமூக ஊடகப் பயனர்கள் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ரேஷம் தனது காரிலிருந்து இறங்குவதையும், இறைச்சிப் பொட்டலத்தை கிழித்து அதன் துண்டுகளை தண்ணீரில் வீசியுள்ளார். அதன்பின் அந்த பிளாஸ்டிக் டப்பாவையும் ஆற்றில் தூக்கி எறிந்தார்.

மேலும் படிக்க ...

இப்படி கூட திருட்டு நடக்குமா? உஷார்!

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களாக கூகுள், மெட்டா ஆகிய நிறுவனங்கள் இருக்கிறது. இந்த நிறுவனங்கள் தென்கொரியா செல்போன் சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் இந்த நிறுவனங்கள் விளம்பர நோக்கங்களுக்காக தங்களது பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை விசாரித்த தென் கொரிய அரசின் தனிநபர் தகவல் மற்றும் பாதுகாப்பு ஆணையம் கூகுளுக்கு 398 கோடியும், மெட்டாவுக்கு   175 கோடி ரூபாய்  அபராதம் விதித்தது. தென்கொரியாவில் கூகுளை பயன்படுத்தும் 82 சதவீதத்தினருக்கும், மெட்டாவை பயன்படுத்தும் 98 சதவீதத்தினருக்கும் தங்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிவது பற்றி எந்த ஒரு தகவலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க ...

  »