«  
தேடல்: 3 3

சிம்பு நடித்தால் நான் நடிக்கமாட்டேன் - அந்த நடிகரா சொன்னார்?

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் PS1 படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது படக்குழுவினர் தற்போது ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்படி ஒரு நிகழ்ச்சியில் ஜெயம் ரவி சர்ச்சை கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். சிம்பு இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருந்தார் என்றும், அவர் நடித்தால் நான் நடிக்கமாட்டேன் என ஜெயம் ரவி சொன்னதாகவும் ஒரு செய்தி முன்பு பரவியது.

அதற்கு பதில் சொன்ன ஜெயம் ரவி, நானே சின்ன வாய்ப்பு கிடைத்தது என அதில் சென்று நடிக்கிறேன். நான் இப்படி சொன்னால் மணிரத்னம் ஏற்றுக்கொள்வாரா? இப்படி ஒரு செய்தி பரவிய போது சிம்புவே எனக்கு போன் செய்து பேசினார்.நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்றால் சந்தோசப்படும் முதல் ஆள் நீதான் என்பது எனக்கு தெரியும். அதனால் இந்த செய்திகளை எல்லாம் கண்டுகொள்ளாதே என சிம்புவே என்னிடம் சொன்னார் என ஜெயம் ரவி விளக்கம் அளித்து இருக்கிறார்.

மேலும் படிக்க ...

விஜயகாந்த் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்! தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு அள்ளி கொடுப்பாராம் விஜயகாந்த். ஆனால், படப்பிடிப்பில் சிலர் அவரிடம் எப்படி உதவி கேட்பது என்று நினைத்துக்கொண்டு தயங்கி நிற்பார்கள். அவர்களை அழைத்து அவர்களுடன் ஒன்றாக சீட்டாடி தோற்றுப்போவதுபோல் நடித்து அவர்களே காசை சம்பாதித்ததுபோல் செய்வாராம் விஜயகாந்த்.

மதுரையில் நடக்கவிருக்கும் கலை நிகழ்ச்சிக்காக தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் அனைவரும் ரயிலில் பயணித்துள்ளார்கள். அப்போது யாருக்கும் உணவு ரயிலில் இல்லை என்று விஜயகாந்திற்கு தெரியவருகிறது. உடனடியாக நடு ராத்திரியில் ரயிலை நிறுத்தி, அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்து அனைவரையும் சாப்பிட வைத்துள்ளாராம் விஜயகாந்த். இதை நடிகர் சூர்யா பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஸ்ட்டியூம் டிசைனர் ஒருவர் தங்களுடைய யூனியன் கட்டடத்தை கட்ட ஒரு பெரிய தொகை தேவைப்படுகிறது என்று விஜயகாந்திடம் உதவி கேட்டுள்ளாராம். இன்னும் இவ்வளவு தொகை தேவை என்று ஒரு கணக்கு புத்தகத்தை விஜயகாந்திடம் கொடுத்துள்ளாராம். சற்று நேரும் புத்தகத்தை பார்த்த விஜயகாந்த் அந்த பெரிய தொகையை நானே மொத்தமாக தருகிறேன், யாரிடமும் நீங்கள் போய் நிற்கவேண்டாம் என்று கூறினாராம் விஜயகாந்த்..


மேலும் படிக்க ...

சிம்புவின் அடுத்த படத்தில் நடிக்கும் கூல் சுரேஷ்!

வெந்து தணிந்தது காடு படத்தை முலைமுடுக்கெங்கும் கொண்டு சேர்ந்தவர்களில் ஒருவர் கூல் சுரேஷ். இவர் சில நாட்களுக்கு தனக்கு எந்த ஒரு படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைவில்லை என்று கூறி வேதனை பட்டார்.

இந்நிலையில், நடிகர் கூல் சுரேஷை தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வைத்துள்ளாராம் சிம்பு. இதை அவரே தெரிவித்துள்ளார்.
இதன்முலம் நடிக்க ஏங்கி கொண்டிருந்த கூல் சுரேஷுக்கு நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க ...

  »