«  
தேடல்: 3 3

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரொனாவால் 3 இறப்புகள்...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று மேலும் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனைகளைத் தொடர்ந்து அவருக்கு நீரிழிவு நோயுடன் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல கொழும்பு 10ஐச் சேர்ந்த 70 வயதுடைய ஆணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இவர் கொழும்பு ஐடிஎச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் கொழும்பு 13ஐச் சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு காரணம் நீரிழிவு நோய் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க ...

யாழ்ப்பாணம் விமானநிலையம் விரைவில் மூடப்படலாம்...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் விமான பயணங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கையின்  அடிப்படையில்  யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் எதிர்காலத்தில் மூடப்படலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் (TNA) சிலர் இந்தியாவுக்குத் தெரிவித்ததாக மவ்விம சிங்கள  பத்திரிகை இணையம் செய்திவெளியிட்டுள்ளது.  அண்மைக் காலங்களில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் இந்தியாவிற்கு (சென்னை) இடையே சுமார் 130 தடவைகள் விமான சேவைகள் நடந்துள்ளன, இதில் 4,325 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும், யாழ்ப்பாணம் -கொழும்பு (இரத்மலானை)  இடையே 906 பயணிகள், 60 தடவை விமான சேவை இடம்பெற்றுள்ளது. இவ்வாறான நிலையில் விமான ரிக்கெட் விலையை குறைக்காதது, பயணிகளின் பொதிகள் ( passenger luggage)  மீதான கட்டுப்பாடுகள் மற்றும் விமான நிலையத்தின் வரி அறிவிடல் குறைக்கப்படாமை போன்ற காரணங்களினால் மக்கள் யாழ்.சர்வதேச விமான நிலையத்தை நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் விளைவாக, கொரோனா நிலையில் கூட, இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் செல்ல சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவும், விமான நிலையத்தில் பொதுவான பிரச்சினைகளாக மாறியுள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதற்கிடையில், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின்  அபிவிருத்திக்கு புதிதாக ஒதுக்கப்பட்ட ரூ .300 மில்லியனை இந்திய அரசு இதுவரை  முதவீடு செய்யவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.   எனவே, குறித்தும் இந்திய அரசு கவனம் செலுத்துமாறு கூட்டமைப்பு  உறுப்பினர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க ...

இலங்கையில் வாகன இறக்குமதி தடைக்கு நடக்கப்போவது என்ன?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை (17) 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்க உள்ளார். இதன்போது ஏனைய பொருட்களின் இறக்குமதிக்கான தடை நீடிப்பதைப் போன்று வாகனங்களுக்கான இறக்குமதியும் நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. அந்நிய செலாவணி வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டது. இந்த தடை 2021 ஆம் ஆண்டிற்கும் தொடரும். பெர்மிட் வைத்திருப்பவர்கள் தங்களது அனுமதிகளைப் பயன்படுத்தவும், சந்தையில் தற்போதுள்ள வாகனப் பங்குகளிலிருந்து வாகனங்களை வாங்கவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.

மேலும் படிக்க ...

  »