«  
தேடல்: 4 4

350க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்த TTC!

கோவிட்-19 தடுப்பூசிக் கொள்கைக்கு இணங்கத் தவறிய 354 ஊழியர்களை டொராண்டோ டிரான்சிட் கமிஷன் (TTC) பணிநீக்கம் செய்துள்ளது.

இது தோராயமாக இரண்டு சதவீத TTC ஊழியர்களின் எண்ணிக்கைக்கு சமமாகும். அவர்கள் அனைவரும் நவம்பர் 21 முதல் பணியிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர் என்று TTC செய்தித் தொடர்பாளர் ஸ்டூவர்ட் கிரீன் மின்னஞ்சலில் தெரிவித்தார்.

 TTC இன் தடுப்பூசி கொள்கை ஆகஸ்ட் 19 அன்று அறிவிக்கப்பட்டது. முதலில் அனைத்து ஊழியர்களும் தங்கள் COVID-19 தடுப்பூசி நிலையை செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. TTC ஊழியர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் அன்றைய தேதிக்குள் அவ்வாறு செய்தனர்.

காலக்கெடு தள்ளி வைக்கப்பட்டு டிடிசி ஊழியர்களுக்கு தடுப்பூசி கொள்கையை கடைபிடிக்க டிச.31 வரை அவகாசம் வழங்கப்பட்டது. காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் தீவிரமாக ஆட்சேர்ப்பு செய்து வருவதாக TTC தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க ...

கனடா கியூபெக் மாகாணத்தில் தடுப்பூசி போடாதவர்கள் தங்கள் மருத்துவ செலவை தாமே ஏற்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்க கனடாவின் கியூபெக் மாகாண அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் சிகிச்சைக்கான கட்டணங்களை அவர்களே செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

கனடாவிலேயே அதிகமான கொரோனா மரணங்கள் கியூபெக் மாகாணத்தில் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் மாகாணத்தில் 12.8% பேர் இதுவரை தடுப்பூசி போடவில்லை.

கொரோனாவால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் 50 வீதமானவர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களாக உள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்க கியூபெக் மாகாண அரசு முடிவு செய்துள்ளதாக மாகாண முதல்வர் பிராங்கோயிஸ் லெகால்ட் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்நிலையில் தடுப்பூசி ஒன்றைக் கூட இதுவரை பெறாதவர்கள் மருத்துவ வரியைச் செலுத்த வேண்டும் என மாகாண முதல்வர் தெரிவித்தார்.   

மேலும் படிக்க ...

ஒன்ராறியோவில் மாணவர்கள் எப்போது வகுப்பறைக்கு திரும்பலாம்? பிரீமியர் Doug Ford அலுவலகம் அறிக்கை!

ஒன்ராறியோ மாகாணத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பில் பிரீமியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒன்ராறியோ மாகாணம் ஒமிக்ரான் மாறுபாட்டால் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகளின் அதிகரிப்புக்கு மத்தியில், ஜனவரி 17ம் திகதி வரை அனைத்து பள்ளிகளையும் மூடுவதற்கு கடந்த வாரம் முடிவு செய்தது.

நோய்த்தொற்றுகள் காரணமாக ஊழியர்கள் வராததை ஒரு பிரச்சினையாக மாகாணம் மேற்கோள் காட்டியது, மேலும் இது பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் செயல்பாடுகளை பாதிக்கும் என்று குறிப்பிட்டது.

இந்நிலையில் ஒன்ராறியோ மாகாணத்தில் ஜனவரி 17ம் திகதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என மாகாண பிரீமியர் Doug Ford அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதாவது, ஜனவரி 17ம் திகதி முதல் மாணவர்கள் நேரடி கல்வி பயில வகுப்பறைக்கு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க ...

  »