«  
தேடல்: 5 5

தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எவ்வளவு? இவர் என்ன அடுக்கி கொண்டே போகிறாரே?

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று முன்னணி
நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில்
அடுத்ததாக டான், அயலான் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் சிங்கப்
பாதை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து
தெலுங்கு இயக்குனர் அனுதீப் கிஷன் இயக்கத்தில் உருவாக உள்ள SK20 என்ற
படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்துக்கு தமன் இசை
அமைக்கிறார். இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு புத்தாண்டு தினத்தில்
வெளியான நிலையில் இப்படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் ரூபாய் 25
கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரூபாய் 10
முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின்
வெற்றியால் தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க ...

நஷ்டஈடு தரட்டுமா என அஜித் கேட்டாரா? ஒரு மாதம் பேசவே இல்ல! 11 ஆண்டு பஞ்சாயத்தை விளக்கும் பிரபலம்! திரைக்கு பின்னாடி இப்படி எல்லாம் நடந்துடுச்சா?

அஜித் ரசிகர்கள்-ஜாக்குவார் தங்கம் போர் இன்னும் ஓய்ந்த பாடில்லை. கருணாநிதி முதல்வராக இருந்த போது, அவருக்கு சினிமாத்துறை சார்பில் வைக்கப்பட்ட பாராட்டு விழாவில், நடிகர் அஜித் பேசியதும், அதற்கு ரஜினி ஆதரவு கொடுத்ததும் இன்றும் பலருக்கும் நியாபகம் இருக்கும்.

ஆனால், அதே பேச்சை காரணம் காட்டி சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், அஜித்தை விமர்சித்ததும், அதற்கு எதிரொலியாக அஜித் ரசிகர்கள் ஜாக்குவார் தங்கம் வீட்டை உடைத்து சூறையாடியதும் நடந்தது. அது நடந்து பல ஆண்டுகள் ஆனாலும், இன்னும் ஜாக்குவார் தங்கத்தை இணையத்தை ஒரு கை பார்த்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள். சமீபத்தில் கூட, அஜித் ரசிகர்களால் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக ஜாக்குவார் தங்கம் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், அப்போது நடந்த என்ன என்பது குறித்து ஜாக்குவார் தங்கம் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இதோ அந்த பேட்டி.

கலைஞருக்கு பாராட்டு விழா நடந்த போது, அஜித் தமிழை பற்றி ஒரு கருத்து பேசினார். அதனால் நான் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தேன். அதன் பின் அவரது ஆதரவாளர்கள் என் வீட்டை அடித்து உடைத்தனர். பின்னர் நடிகர் சங்கத்தில் வந்து நடந்த சம்பவத்திற்கு அஜித் வருத்தம் தெரிவித்தார். நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறினார். நடந்த சம்பவத்திற்கும் எனக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்றார். சேதத்திற்கு நஷ்டஈடு தருகிறேன் என்றார். நான் தான் அதெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டேன். அந்த காலகட்டத்தில் அந்த கருத்து காரசாரமாக இருந்தது. எனக்கு என தாய் மொழி மீது பற்று உள்ளது.

ரஷ்யாவில் குட்மார்னிங் என்று சொன்னால், பளார் என்று அடித்து விடுவார்கள். காரணம், தாய் மொழி மீது அங்கு அவ்வளவு பற்று. அவர்கள் மொழியில் தான் வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று வைத்திருக்கிறார்கள்.

அஜித் உடன் ஒரு மாதம் மனகசப்பு இருந்தது. ஒரு மாதத்திற்கு பின் பேச ஆரம்பித்தோம். அப்போது சரத்குமார், விஜயகாந்த் ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்தனர். அவர்கள் அழைத்து எங்களை சமரசம் செய்ய முயன்றனர். அப்போது அஜித் மனம் திறந்து பேசினார். எனக்கு சோறு போடுவது தமிழ் தான். நான் ஏன் தமிழை தவறாக பேசப்போகிறேன் என அஜித் கூறினார். அதுமட்டுமல்லால் சில பிரச்சனைகளுக்கு தன்னுடன் இருந்தவர்கள் தான் காரணம் என்றார். அவர்களும் மன்னிப்பு கேட்டனர் என அந்த பேட்டியில் ஜாக்குவார் தங்கம் கூறியுள்ளார்.மேலும் படிக்க ...

அம்மாவின் இழப்பால் மதுவுக்கு அடிமையான யுவன்! மீண்டு வந்தது எப்படி?

பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா சில ஆண்டுகளுக்கு முன்னர் மதுவுக்கு அடிமையாகி, பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மாறி அதில் இருந்து வெளியே வந்தார்.

அந்தத் தருணங்கள் பற்றி அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில்,  என்னுடைய அம்மாதான் எனக்கு பெரிய பலமாக இருந்தார். அவர் திடீரென்று மறைந்த போது அந்த இடத்தில் ஒரு வெற்றிடம் உருவானது. அப்போது நான் வருத்தத்தில் இருந்தேன்.

மருத்துவமனையின் படுக்கையில் அவரது உயிர் பிரிந்தது. அவர் உயிர் பிரிந்த போது, அவரது கை அப்படியே கீழே விழுந்தது. அப்போதுதான் எனக்கு உடலில் ஆன்மா எங்கிருக்கிறது. அது யாரிடம் செல்கிறது போன்ற கேள்விகள் எழத் தொடங்கின. அந்தத் தேடல்தான் என்னை இஸ்லாம் மதத்தை நோக்கி அழைத்துச் சென்றது. அந்தப் பயணத்தில்தான் நான் அந்த டார்க் சோனுக்குள் சென்றேன். இது யாருக்கு வேண்டுமென்றாலும் நடக்கலாம். ஆனால் அதை எப்படி பாசிடிவாக மாற்றி வெளியே வருகிறோம் என்பதே இங்கு முக்கியமானது.

அந்த சமயத்தில் ஆல்கஹாலை குடிக்கும் போது, எனக்குத் தெரியும் இது நான் இல்லை என்பது. அப்போது என்னை நான் ஒரு மூன்றாவது நபராகத்தான் பார்த்தேன். ஆனால் அப்போதே எனக்குத் தெரியும் நான் இதிலிருந்து வெளியே வந்துவிடுவேன். அந்த சமயத்தில் நான் எந்தப் படங்களிலும் கமிட் ஆக வில்லை என்றார்

மேலும் படிக்க ...

  »