«  
தேடல்: 1 1

வீட்டின் அடித்தளத்தில் கேட்ட குறட்டை சத்தம்! ஹவுஸ் ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்க நாட்டில் கலிபோனியா என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் ஒரு குடும்பத்தினருக்கு தன் வீட்டின் கீழ் தளத்தில் இருந்து குறட்டை போன்ற சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. இந்த சத்தத்தை பொருட்படுத்தாமல் தன்னுடைய கற்பனையே எனக்கருதி அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என அறியாமல் அப்படியே விட்டு விட்டனர்.

இதனை அடுத்து திடீரென ஒருநாள் தன் வீட்டின் கீழ்தளத்தில் ஒதுக்குப்புற இடத்தைப் பார்த்த போது அங்கு ஒரு தாய் கரடியும் 4 குட்டி கரடியும் உறக்க நிலை முடித்து வெளியே செல்ல தயாராக இருந்ததையும் கண்டனர். இதனை தொடர்ந்து தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இந்த கரடிகளை காட்டுக்குள் கொண்டு சென்றுவிட்டுள்ளனர்.

மேலும் படிக்க ...

சர்வதேச விண்வெளிக்கு சுற்றுலா பயணம் ஆயத்தமாகிறது!

அமெரிக்க நாட்டின் ஆக்ஸியாம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த தனியார் நிறுவனத்தின் ஏற்பாட்டின் மூலம் ஸ்பைஸ் எக்ஸ் நிறுவன  விண்கலமானது கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு  4 பேர்  சென்றுள்ளனர். இவர்கள் சுமார் இரண்டு வாரங்களாக பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து  பூமியில் இருந்த 420 கிலோமீட்டர் விண்ணை சுற்றி வரும் இந்த சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதன் முறையாக சுற்றுலா சென்ற 4 பயணிகள் தங்களுடைய பயணத்தை முடித்து பூமி திரும்புகின்றனர்.  இதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் சென்ற விண்கலம் அவர்களை ஏற்றிக் கொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

மேலும்  பூமியை நோக்கி 16 மணி நேரம்  பயணத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர். இதனையடுத்து  அட்லாண்டிக் கடல் பகுதியில் அவர்களது கேப்ஸ்யூல் வந்து இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் அவர்கள் நால்வரும் அந்த கேப்ஸ்யூல் ஃப்ளோரிடா கடல்பகுதியில் வந்து இறங்கியது.

மேலும் படிக்க ...

ஒரு நம்பர் பிளேட் 73 கோடி …!! சும்மா இல்ல விஷயம் இருக்கு!

துபாயின் அரசரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் சமயத்தில் உலகம் முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அதன்படி இந்த வருடமும் உலகம் முழுவதும் உள்ள 100 கோடி மக்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை செயல்படுத்த நிதி திரட்டும் நோக்கில் வாகன உரிமைகளுக்கான பிரத்தியேக ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்திற்காக வரவழைக்கப்பட்ட பல நம்பர் பிளேட்டுகள் கோடிக்கணக்கில் ஏலம் போனது. அந்த வகையில் AA8 என்ற எண் கொண்ட நம்பர் பிளேட் 35 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு ஏலம் போனது. இது இந்திய மதிப்புக்கு ரூ.73 கோடி ஆகும்.

மேலும் படிக்க ...

  »