«  
தேடல்: 3 3

நயன்தாரா விக்னேஷ் சிவன் break up !!

தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகை
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும்
ரவுடிதான் படத்தில் நடித்தார் நயன்தாரா. அப்போது இருவருக்குள்ளும் காதல்
மலர்ந்தது. திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் விக்னேஷ் சிவனும்
நயன்தாராவும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை
தொடங்கினர்.

தொடங்கிய சொற்ப காலத்திலேயே ரவுடி பிக்சர்ஸ் மூலம் பல
வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்றும்
தங்களின் காதலை வளர்த்து வருகின்றனர் விக்கியும் நயனும். இருவரும் விரைவில்
திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வாடகைத் தாய் மூலம் குழந்தை
பெற்றுக்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

அதுகுறித்து
இருவரும் இதுவரை வாய் திறக்கவில்லை. இந்நிலையில் நடிகை நயன்தாரா விக்னேஷ்
சிவன் மீது கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில்
நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப்
படத்தின் கதை நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் இடையே இருந்த காதலை
பிரதிபலிப்பதாக தெரிகிறது. திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக விஜய்
சேதுபதியும் நயன்தாராவும் வாழ்வதாகவும் அவர்களுக்கு இடையில் சமந்தா
காதலியாக வருவதாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருமணமாகி
மனைவி குழந்தை என இருந்த பிரபு தேவாவை நயன்தாரா காதலித்த கதையை வைத்து
விக்னேஷ் சிவன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை உருவாக்கியிருப்பதாக
யூகித்த நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் அதுகுறித்து கேட்டுள்ளார். ஆனால்
அதற்கு விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து முறையான விளக்கம் வரவில்லை என்றும்
கூறப்படுகிறது.

விரைவில் திருமணம் செய்து கொள்ள கோவில் கோவிலாக ஏறி
இறங்கி இருவரும் பரிகாரம் செய்து வந்தனர். பட ரிலீஸுக்கு பிறகு இருவரும்
தங்களின் திருமண தேதியை அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்தது.
இந்த நேரத்தில் நயன்தாரா இப்படி ஒரு முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகி
வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் விக்னேஷ்
சிவன் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் நடிகை நயன்தாரா. தனக்கே
தெரியாமல் தனது எக்ஸ் காதலை வைத்து தனது பணத்திலேயே படம் எடுத்த விக்னேஷ்
சிவனை பிரேக் அப் செய்யும் முடிவில் இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான
வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. நயனின் முடிவால்
அதிர்ச்சியில் உள்ள விக்கி அவரை கூல் செய்ய முயற்சி செய்து வருகிறாராம்.


மேலும் படிக்க ...

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் நயன்தாராவின் உண்மைக் கதையாம்..!

நயன்தாராவின் சொந்த படமான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் விக்னேஷ் சிவன் இயக்க விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா நடிப்பில் வருகிற 28ஆம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது.

இந்த படத்தின் பாடல்கள் படம் வருவதற்கு முன்னே செம ஹிட் ஆனது. அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தின் கதை ஒரு முக்கியமான பிரபலத்தின் உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டிருக்கலாம் என நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரெங்கநாதன் தெரிவித்து இருந்தார். அவர் வேறு யாருமில்லை. நடிகை நயன்தாரா தான். ஏற்கெனவே இரண்டு நடிகர்களுடன் காதல் வையப்பட்டு தோல்வியடைந்தவர் நயன்.

பிரபுதேவாவுடன் சேர்ந்து மதம் மாறுவதற்கே தயாராக இருந்தார். அவரின் பெயரை பச்சை குத்திக் கொண்டு திரிந்தார். கடைசியில் பிரபு தேவாவின் மனைவி குறுக்கீட்டால் இந்த காதல் முற்றுப் பெற்றது. ஒருவேளை இந்த சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு கூட விக்னேஷ் சிவன் இந்த படத்தை எடுத்திருக்கலாம் என ரெங்கனாதன் கூறுகிறார்.

மேலும் படிக்க ...

இனி நடிக்கவே மாட்டேன்.! அங்கதான் போகப்போறேன்..! மனம் திறக்கிறார் அரவிந்த் சாமி..

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவியுடன் போகன் படத்தில் ஒரு கம் பேக் கொடுத்து எல்லாரையும் அசத்தினார் அரவிந்த் சாமி. அந்த படத்தில் அவரின் ஸ்டைல் அடிச்சக்க யாரும் இல்ல. அதன்பின் தனி ஒருவன், செக்க செவந்த வானம் என படங்களில் ஆர்வம் காட்டியவர் திடீரென எந்த ஒரு படத்திலும்கமிட் ஆகாமல் இருந்தார்.

காரணம் தெரிய பேட்டி எடுத்த போது நான் இனி நடிக்க மாட்டேன், படம் இயக்கத்தான் போறேன், ஸ்க்ரிப்ட் கூட ரெடியா இருக்கு, பொருத்தமானவர்கள் இருந்தால் சீக்கிரம் படம் சூட்டிங் ஆரம்பிச்சுருவேன் என கூறினார். ஆனா நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என கூறினார்.

மேலும் படிக்க ...

  »