10% பணியாளர்களை குறைக்க முடிவு! நீங்களுமா ராசா?

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் சிஇஓவாக இருக்கிறார். இவர், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால் அதன் பின்பு அதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை.
எனினும், அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை பெற்று அதன் பங்குதாரராக உள்ளார். இவர் சமீபத்தில் தன் டெஸ்லா நிறுவனத்தை சேர்ந்த அனைத்து பணியாளர்களும் ஒவ்வொரு வாரத்திற்கும் குறைந்தபட்சம் 40 மணி நேரங்கள் அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும், இல்லையெனில் பணியிலிருந்து நீக்கப்படுவீர்கள் என்று அறிவித்தார்.
இது பணியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் தன் பணியாளர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதாவது பொருளாதாரம் குறித்து தான் மிக மோசமாக உணர்வதால் தன் நிறுவனத்தில் 10 சதவீத பணியாளர்களை குறைக்க முடிவு எடுத்திருப்பதாக கூறியிருக்கிறார்.
எனவே, உலக நாடுகளில் டெஸ்லா நிறுவனத்தினுடைய அனைத்து பணியமர்த்தல்களையும் தற்காலிகமாக நிறுத்துமாறு தன் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார்.