நடிகை ப்ரணிதா வீட்டுக்கு குட்டிச் சுட்டி வந்தாச்சு...

நடிகை ப்ரணிதா பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜுவை 2021-ம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதையே ப்ரணிதா அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக ப்ரணிதா அறிவித்துள்ளார். எங்கள் பெண் குழந்தை வந்ததிலிருந்து கடந்த சில நாட்களாக வாழ்க்கை மாயாஜால உலகம் போல் இருக்கிறது என்று ப்ரணிதா தெரிவித்துள்ளார். மேலும் தன் குழந்தையுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.