«     »  
New Details Back to news list

பிளாஸ்டிக் கழிவுகளை ஆற்றில் வீசிய நடிகைக்கு கண்டனம்!



பாகிஸ்தான் நாட்டில் உள்ள திரைப்பட நடிகை ஒருவர் பிளாஸ்டிக் கழிவுகளை ஆற்றில் வீசுவதைக் காட்டும் வீடியோ, இணையத்தில் வைரலாகி பார்வையாளர்களை கோபமடைய செய்துள்ளது. பாகிஸ்தான் திரைப்பட நட்சத்திரம் ரேஷம் என்பவர் பிளாஸ்டிக் பொதியை ஆற்றில் வீசியுள்ளார். இதனால் சமூக ஊடகப் பயனர்கள் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ரேஷம் தனது காரிலிருந்து இறங்குவதையும், இறைச்சிப் பொட்டலத்தை கிழித்து அதன் துண்டுகளை தண்ணீரில் வீசியுள்ளார். அதன்பின் அந்த பிளாஸ்டிக் டப்பாவையும் ஆற்றில் தூக்கி எறிந்தார்.

Share This Post