«     »  
New Details Back to news list

ரூ.14 கோடி. ஏலத்தில் போட்டி போட்ட புறா வளர்ப்பாளர்கள். பண மழையில் புறா ஓனர்..!!

பெல்ஜியம் நாட்டில் அதிக அளவு ஏலம் போன புறா என்ற பெருமையை நியூ கிம் புறா பெற்றுள்ளது.

பெல்ஜியம் நாட்டில் பந்தய புறாக்கள் மிகவும் பிரபலம். சீனாவில் புறா பந்தயங்கள் பிரபலம். இந்த நிலையில் இரண்டு வயது பெல்ஜியம் பந்தய புறாவை சீனர் ஒருவர் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார். நியூ கிம் என்ற அந்த புறாவின் ஆரம்ப ஏல விலை 17,600 ரூபாய் என்ற அளவில் தான் ஆரம்பித்தது. இரண்டு சீனர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டதில் விலை உச்சம் தொட்டதாக ஏல நிறுவனம் கூறியுள்ளது. இறுதி ஏல தொகை ரூ.14 கோடி என்பதை கேட்டு மயங்கியுள்ளார் புறாவை வளர்த்தவர். மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனவர் குடும்பத்தினரை கூட்டி கொண்டாடியுள்ளார். இதற்கு முன், அர்மாண்டோ என்கிற 4 வயது ஆண் புறா 2019-ம் ஆண்டு ரூ.11 கோடிக்கு விலை போனது தான் முந்தைய உச்ச விலையாக இருந்தது. அதனை நியூ கிம் புறா முறியடித்துள்ளது.


Share This Post