கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை முசுரம்பிட்டி பகுதியில் 12.01.2022 இன்றைய தினம் அதிகாலை 5.00 மணியலவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்காக காலை உணவு தயாரித்துக் கொண்டிருக்கையில் திடீரென வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் பின்னர் வீட்டில் நித்திரையில் இருந்த அனைவரும் சத்தம் கேட்டவுடன் வீட்டிலிருந்து வெளியே ஒடிவந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
பின்னர் வெடிப்பு சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடிவந்து காஸின் ரேகுலோட்டரினை அகற்றியதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.