கோவிட்-19 தடுப்பூசிக் கொள்கைக்கு இணங்கத் தவறிய 354 ஊழியர்களை டொராண்டோ டிரான்சிட் கமிஷன் (TTC) பணிநீக்கம் செய்துள்ளது.
இது தோராயமாக இரண்டு சதவீத TTC ஊழியர்களின் எண்ணிக்கைக்கு சமமாகும். அவர்கள் அனைவரும் நவம்பர் 21 முதல் பணியிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர் என்று TTC செய்தித் தொடர்பாளர் ஸ்டூவர்ட் கிரீன் மின்னஞ்சலில் தெரிவித்தார்.
TTC இன் தடுப்பூசி கொள்கை ஆகஸ்ட் 19 அன்று அறிவிக்கப்பட்டது. முதலில் அனைத்து ஊழியர்களும் தங்கள் COVID-19 தடுப்பூசி நிலையை செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. TTC ஊழியர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் அன்றைய தேதிக்குள் அவ்வாறு செய்தனர்.
காலக்கெடு தள்ளி வைக்கப்பட்டு டிடிசி ஊழியர்களுக்கு தடுப்பூசி கொள்கையை கடைபிடிக்க டிச.31 வரை அவகாசம் வழங்கப்பட்டது. காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் தீவிரமாக ஆட்சேர்ப்பு செய்து வருவதாக TTC தெரிவித்துள்ளது.