«  
தேடல்: 1 1

இலங்கையில் தொடர்ந்து கரை ஒதுங்கும் உடல்கள்!

இலங்கையில் நிதி நெருக்கடி கடுமையாக அதிகரித்திருக்கிறது என்பது உலகமே அறிந்த செய்தி. எனவே, அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி அன்று காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் குடில்கள் நீக்கப்பட்டது.

மேலும் ஆர்ப்பாட்டத்தின் முன்னணியாளர்கள் கைதானார்கள். இந்நிலையில் கடந்த 26ம் தேதி அன்று அந்த பகுதியில் 35 வயதுடைய ஒரு இளைஞரின் சடலம் கரை ஒதுங்கியிருக்கிறது. அவர் பற்றிய தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி அன்று மற்றொரு இளைஞனின் உடலும் கண்டறியப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வேறொரு இளைஞரின் சடலமும் கரை  ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க ...

கூடும் போராட்ட களம்! காவல்துறை அதிருப்தி!

இலங்கை நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதன் காரணமாக கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றார். அங்கிருந்து மறுநாள் சிங்கப்பூருக்கு சென்ற கோத்தப்பய தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு இலங்கையில் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு எதிராகவும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க ...

ரசிகர்களுக்காக நபரின் செயல் உயிரையே பறித்தது!

பிரேசில் நாட்டின் ரிபேராவ் பிரிட்டோ பகுதியை சேர்ந்தவர் வால்டிர் செகாடோ(55) புகழ் பெற்ற பாடி பில்டராகவும் டிக் டாக் நட்சத்திரமாகவும் திகழ்ந்தவர்.இவர் தனது உடலை மேற்கொண்டு தீவிரமாக காட்ட உயிருக்கு ஆபத்தான ஆல்கஹால் வலி நிவாரணங்களின் கலவை போன்ற ஊசிகளை தொடர்ந்து எடுத்து வந்துள்ளார்.அதனால் கடுமையான நரம்பு பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்த நிலையில் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து அந்த வகை ஊசிகளை எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனது பிறந்தநாள் அன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனென்று பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படிக்க ...

  »