«  
தேடல்: 2 2

உஷார்! விளையாடிக்கொண்டிருந்த போது.. எல்இடி பல்பை விழுங்கிய சிறுவன்.!!

 சிறுவன் ஒருவர் விளையாடிக்கொண்டிருந்த போது எல்இடி பல்ப்பை விழுங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த 9 வயதுள்ள சிறுவன் ஒருவன் வீட்ட்டில் அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த எல்இடி பல்பு ஒன்றை எடுத்து சிறுவன் விழுங்கியுள்ளான். இந்த பல்பு சிறுவனின் நுரையீரல் பாதையில் சிக்கி உள்ளது. இதனால் சிறுவனுக்கு வலி ஏற்பட்டு அலறி துடித்துள்ளான். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அவருடைய பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அவருடைய வயிற்றில் எல்இடி பல்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து அதை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர் . இதையடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பல்ப்பை வெளியே எடுத்து சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளனர். சிறுவன் ஒருவன் எல்இடி பல்ப்பை விழுங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க ...

நாட்டையே உலுக்கிய கொடூரம். சாமி கும்பிட போன பெண் பலாத்காரம். பெரும் பரபரப்பு.!!!

இந்தியா  உத்திரப்பிரதேச மாநிலத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட போன பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை இயற்றிய போதிலும், சில காம கொடுரர்களால் தொடர்ந்து இது மாதிரியான குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் உத்திரப் பிரதேசம் மாநிலம் புதான் மாவட்டத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட போன 50 வயது பெண்ணை, கோவில் அர்ச்சகர் உள்ளிட்ட 3 பேர் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, அந்தரங்க உறுப்பை சிதைத்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மருத்துவ அறிக்கையில், பெண்ணின் உடலில் பல எலும்புகள் உடைக்கப்பட்டுள்ளது. நுரையீரல் குத்திக் கிழிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. மேலும் பெண்ணின் உறவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க ...

இனிமே லேட்டா வருவியா? கொதிக்க கொதிக்க எண்ணெய்.. கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி.!!

 மனைவி ஒருவர் கணவனின் முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, மத்திய பிரதேசத்தில் வசிக்கும் தம்பதிகள் அரவிந்த் - சிவகுமாரி. இவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இந்நிலையில் அரவிந்த் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இடையே எப்போதும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது அவர்களின் பெற்றோர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வருவதை வழக்கமாக இருந்தது. இதேபோல் சம்பவத்தன்று இருவருக்குள்ளும் சண்டை வந்துள்ளது.

தினமும் வேலைக்கு சென்று வீட்டிற்கு தாமதமாக வருவதால் கணவனிடம் சிவகுமாரி தகராறு செய்துள்ளார். இதனால் இவருக்கு இருவருக்கும் பயங்கரமான சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த மனைவி காலை 5 மணிக்கு சட்டியில் கொதித்து கொண்டிருந்த எண்ணெய்யை தூங்கிக்கொண்டிருந்த தன் கணவன் முகத்தில் ஊற்றியுள்ளார். எனவே அரவிந்தின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே அரவிந்தை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முகத்தில் எண்ணெய் ஊற்றியதில் அரவிந்த் படுகாயமடைந்துள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி கோபத்தில் தூங்கி கொண்டிருந்த கணவனின் முகத்தில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க ...

  »