«  
தேடல்: 1 1

மகனுக்காக அப்பா கட்டிய ஐஸ் வீடு..! அப்போது நடந்த சம்பவம்.. துடிதுடித்து போன தந்தை .!

 தனது ஏழு வயது சிறுவனுக்காக பனிவீடு ஒன்றை கட்டி எதிர்பாராமல் நிகழ்ந்த சோகம் சுவிட்சர்லாந்தில் அரங்கேறியுள்ளது.

ஸ்விட்ஸர்லாந்தில் டரஸ்ப் என்ற பகுதியில் தன் 7 வயது மகனுக்காக தந்தை ஒருவர் பனிவீடு ஒன்றை கட்டியுள்ளார். அதில் தந்தையும் மகனுமாய் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராமல் அந்த வீடு நிலைகுலைந்துள்ளது.அதனால் தந்தை ,மகன் இருவர் மீதும் பணி முழுவதும் விழுந்து அதில் சிக்கி தவித்துள்ளனர். பின் தந்தை மட்டும் எப்படியோ போராடி வெளியே வந்துள்ளார் .ஆனால் தன் மகனை காணவில்லை.

மற்றொரு நண்பருடன் சேர்ந்து மகனை 15 நிமிடத்திற்கு பிறகு கண்டுபிடித்துள்ளார். மயக்க நிலையில் இருந்த குழந்தைக்கு முதலுதவி செய்ய மருத்துவ குழுவினரும் வந்து சேர அவர்கள் ஹெலிகாப்டர் மூலம்சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் இறுதியில் சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் உயிரிழந்துள்ளான் . இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க ...

சிறுவயதில் தங்க இடமில்லை.. கழிவறையை பயன்படுத்தினேன்..! திடீரென கோடீஸ்வரராக மாறிய இளைஞனின் வாழ்க்கை ..!!

 அமெரிக்காவில் உள்ள விர்ஜினியாவை சேர்ந்த பிராண்டன் என்பவர் சிறுவயதிலிருந்து வறுமையில் போராடி வந்த நிலையில் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளார் .

அமெரிக்காவை சேர்ந்த பிராண்டன் காண்டி(25) என்பவருக்கு சிறுவயதிலேயே தந்தை கிடையாது. தாய் கஷ்டப்பட்டு வேலை பார்த்து தான் அவரை வளர்த்தார்.பிறகு தாய்க்கு வேலை பறிபோன நிலையில் வாடகை வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் தற்போது அவர் இரண்டு ஆண்டுகளிலேயே இன்ஸ்டாகிராம் மார்க்கெட்டிங் ஏஜென்சி மற்றும் சில தொழில்கள் மூலம் கோடீஸ்வரராகி உள்ளார். விலை உயர்ந்த ஆடைகள்,சொகுசு கார் ,வீடு என்பதாக அவரின் வாழ்க்கையே மாறியுள்ளது.

பிராண்டன் கூறுகையில் வீடு இல்லாமல் இருக்கும் போது தன் நண்பர்கள் யாரவது இடம் தர மாட்டார்களா என்று இடம் தேடி அலைந்திருக்கிறேன். தங்க இடம் இல்லாத போது சில சமயம் பொது கழிவறையை கூட பயன்படுத்தி இருக்கிறேன்.மேலும் சிறு வயதில் சம்பாதித்த பணத்தை கொஞ்சம் சேமித்த வைத்ததாகவும் கூறியுள்ளார். அவரின் வளர்ச்சியை பற்றி கூறுகையில் உங்களை மட்டும் நம்புங்கள் அதுவே போதும் தற்போது தன் தாய்க்காக பெரிய வீட்டை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இன்ஸ்டாகிராமில் செய்து வரும் வேலை மூலமாக பிரண்டனுக்கு மாதம் $25,000 லாபம் கிடைப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் படிக்க ...

எனது கர்ப்பத்திற்கு காற்று தான் காரணம்! 15 நிமிடத்தில் குழந்தை! அதிர வைத்த சம்பவம்..

 காற்றிலே கர்ப்பமாகி 15 நிமிடத்தில் குழந்தை பிறந்து விட்டதாக இந்தோனேஷியா பெண் ஒருவர் கூறியது பரபரப்பாகி வருகிறது.

உடலுறவு கொள்ளாமல் காற்றில் கற்பமாகியதாக கூறிய ஒரு சில நேரத்தில் அப்பெண்ணிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த சம்பவம் இந்தோனேசியாவில் அரங்கேறியுள்ளது. இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா பகுதியில் உள்ள சார்ஜர் என்ற நகரத்தை சேர்ந்த சிதி ஜைனா என்ற பெண் இந்த சம்பவம் குறித்து கூறியதாவது கடந்த புதன்கிழமை அன்று மதிய நேரத்தில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வீட்டின் வரவேற்பு அறையில் தரையில் முகத்தைக் கீழே சாய்ந்து படுத்திருந்தேன்.

திடீரென்று என் யோனி வழியாக காற்று என் உடலுக்குள் புகுந்து நான் இருந்த அறையில் பலமாக காற்று வீசியது. காற்று வீசிய 15 நிமிடங்கள் கழித்து என் வயிற்றில் வலி ஏற்பட்டது. பின்னர்தான் அது வயிற்றுக்குள் ஏதோ பெரியதாக இருப்பதை உணர்ந்தேன். அன்றைய தினமே எனக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. நான் ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளேன். எனது கர்ப்பத்திற்கு காரணம் உடல் உறவு இல்லை என சிதி ஜைனா கூறினார்.

மிகவும் ஆச்சரியம் தரும் வகையில் வினோதமாக இருந்தது. இது தீயாய் பரவ ஆரம்பித்தது. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனது தெரியவந்தது. அவருடைய முன்னாள் கணவர் மூலமாக ஒரு குழந்தை உள்ளது. அவர்கள் 4 மாதங்களுக்கு முன்னதாக பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அனைத்து சாத்தியக்கூறுகளும் போலீசார் சிதி ஜைனாவின் முன்னாள் கணவரிடம் விசாரித்து வருகின்றனர்.

திருமணத்திற்கு வெளியே ஏற்பட்ட உறவின் காரணமாக உருவாகிய குழந்தை குறித்து ஜைனா மறைத்திருக்கலாம் என பரவலாக சந்தேகிக்கின்றனர். மத கோட்பாடுகளை இது சார்ந்து உள்ள காரணத்தினால் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் .குழந்தை பிறப்பு தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில் தாயும் குழந்தையும் நன்றாக உள்ளனர். சைனாவின் கர்ப்பம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருப்பதாலும் இது ரகசியமான கர்ப்பத்தின் ஒரு சந்தர்ப்பமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பிரசவத்திற்கு நுழையும் வரை தாய் தனது கர்ப்பத்தை பற்றி அறிந்திருக்க மாட்டார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்

மேலும் படிக்க ...

  »