«  
தேடல்: 2 2

உத்திரப்பிரதேச கிராமங்களில் கொரோனாவால் மடியும் மக்கள்!

இந்தியா,உத்திரப்பிரதேச மாநிலத்தின் கிராமப்புறங்களில், கொரோனா பாதிப்பால், மக்கள் அதிகளவில் மரணமடையும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலையில், அதிகம் பாதித்த மாநிங்களில் உத்திரப்பிரதேசமும் ஒன்று. இந்தியாவிலேயே, மிக மோசமான மருத்துவக் கட்டமைப்பைக் கொண்ட மாநிலங்களில் இது முக்கியமானது.

தற்போது, பாஜகவின் யோகி முதல்வராக இருக்கும் நிலையில், நிலைமை மிக மிக மோசமாக உள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து யாரும் கேள்வியெழுப்பக் கூடாது என்ற உத்தரவு வேறு அங்குள்ளது.

இந்நிலையில், அங்குள்ள முக்கியமான ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிலவற்றில், கொரோனா பரிசோதனையே மேற்கொள்ளப்படுவதில்லை என்ற புகாரும் உள்ளது. அது நிர்வாக உத்தரவு என்றும் சொல்லப்படுகிறது.

அங்குள்ள மருத்துவர்களும் கையறு நிலையில் உள்ளனர் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 200 கிராமங்களின் நம்பிக்கையாக விளங்கும் ஒரு முக்கியமான ஆரம்ப சுகாதார மையத்தில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உத்திரப் பிரதேசத்தின் நகர்ப்புற பகுதிகளைப் போன்று, கிராமப்புற பகுதிகளும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றன என்றே தகவல்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க ...

ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றி வாயை மூடிக்கொண்டிருங்கள் அதிகாரிகளிடம் காட்டமாக பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

ஆக்ஸிஜன் பற்றாக்குறையை காரணம் காட்டி நோயாளிகளை இடமில்லை என்று கூறி வெளியில் அனுப்பும் மருத்துவமனைகள் அல்லது இதுகுறித்து ஊடகங்களுக்கு புகார் அளிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த ஆன்லைன் கூட்டத்தில், பேசிய உத்தர பிரதேச (இந்தியா) முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இவ்வாறு கூறியதாக மாநில சுகாதார துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லை அதனால் நோயாளியை வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறும் மருத்துவமனைகள், மக்களிடையே வேண்டுமென்றே அச்சத்தை ஏற்படுத்த அவ்வாறு கூறுகிறதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

இந்தியா, உத்தரபிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என்று ஆதித்யநாத் அந்த கூட்டத்தில் பேசியதாகவும். ஒவ்வொரு பொது மற்றும் தனியார் மருத்துவமனையிலும் ஆக்சிஜன் கிடைப்பதை அரசாங்கம் உறுதிசெய்கிறது, ஆனால் அதன் தவறான பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதே நேரத்தில் அவரின் அடுத்ததடுத்த முன்னுக்கு பின் முரணான பேச்சு மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழலை மறைமுகமாக ஒப்புக்கொள்வது போல் இருந்தது.

100 அல்லது அதற்கு மேற்பட்ட படுக்கைகள் கொண்ட ஒவ்வொரு அரசு அல்லது தனியார் மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் ஆலை இருப்பதை உறுதி செய்யுமாறு அவர் அதிகாரிகளை கேட்டார். திட்டங்களைத் தயாரித்து தலைமைச் செயலாளருக்கு அனுப்புமாறு அவர் அவர்களிடம் கூறினார் என்று அந்த அதிகாரி கூறினார்.

லக்னோ மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள பல மருத்துவமனைகள் வார இறுதியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து மருத்துவமனையின் வெளியே தகவல் பலகையில் தெரிவிக்கவேண்டும், கோவிட் நோயாளிகளை வேறு இடங்களுக்கு மாற்றுமாறு அவர்கள் குடும்பத்தினரை அறிவுறுத்த வேண்டும்.

ஒவ்வொரு மருத்துவமனைக்கும் வந்து ஆக்சிஜன் கையிருப்பு குறித்து ஆய்வு செய்ய முதல்வரை நான் அழைக்கிறேன், அப்படி அவர் வந்தால் மருத்துவமனைகளின் நிலையையும் மக்களின் துயருக்கும் யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும், இது அவருக்கு தெரிந்ததால் தான் அவர் அவ்வாறு செய்ய மறுக்கிறார் என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு தனியார் மருத்துவமனை நிர்வாகி தெரிவித்தார்.

சடலங்களை எரிப்பதற்கு புதைப்பதற்கும் கூட இடம் இல்லாமல் மக்கள் அவதிப்படுவது அவருக்கு தெரியவில்லை, மாறாக மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறிக்கொண்டு உண்மை நிலையை மறைக்க பார்க்கிறார் என்று அவர் மேலும் கூறினார்.

கூட்டத்திற்கு பிறகு, திங்களன்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளதாக லக்கிம்பூர் கெரி, ஃபிரோசாபாத், பரேலி மற்றும் மீரட் மாவட்டங்களைச் சேர்ந்த பல மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக எங்கள் மருத்துவமனையில் இருந்து 20 நோயாளிகளை ஆர்யாவார்ட் மருத்துவமனைக்கு மாற்றினோம். எங்களுக்கு ஒரு நாளைக்கு 300 முதல் 400 சிலிண்டர்கள் தேவை, ஆனால் 150 மட்டுமே கிடைக்கிறது என்று மீரட்டின் ஆனந்த் மருத்துவமனையின் டாக்டர் சஞ்சய் ஜெயின் கூறினார்.

எங்கள் மருத்துவமனையில் 80 (கோவிட்) நோயாளிகள் உள்ளனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறை அவர்களின் சிகிச்சைக்கு இடையூறாக உள்ளது என்று மீரட்டின் நுடெமா மருத்துவமனையின் டாக்டர் ரோஹித் கம்போஜ் கூறினார்.

இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லை, எங்களுக்கு 100 சிலிண்டர்கள் தேவை படும் நிலையில் 10 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. நோயாளிகளின் உறவினர்கள் கூச்சலிடுவதுடன் அவர்களை வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்கிறார்கள் என்று ஃபைரோசாபாத் மாவட்ட மருத்துவமனையைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் கூறினார்.

சனிக்கிழமையன்று, ஆக்ராவில் உள்ள 10 மருத்துவமனைகளில் இருந்து சுமார் 1,000 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் வெளியேற்றப்பட்டனர் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் மாவட்டத் தலைவர் டாக்டர் ஓ.பி. யாதவ் தெரிவித்திருந்தார்.

எங்களுக்கு வாரத்திற்கு 50 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது, ஆனால் கடந்த 10 நாட்களில் எங்களுக்கு 5 சிலிண்டர்களை மட்டுமே அரசு வழங்கியது. எங்களுக்கு வேறு வழி இல்லாமல் (கோவிட்) நோயாளிகளை வெளியேற்றினோம் என்று ஆக்ராவின் யஷ்வந்த் மருத்துவமனையின் டாக்டர் சுரேந்திர சிங் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் படிக்க ...

இறுதிச் சடங்குக்காக ஒரே ஆம்புலன்சில் 22 சடலங்களை திணித்து ஏற்றி சென்ற அவலம்.!

இந்தியா, மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருவதுடன் உயிரிழப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் உடல்களை இறுதிச்சடங்குக்ககாக எடுத்துச்செல்வதிலும் சிக்கல் எழுந்துள்ளது. இதையொட்டி, ஒரே ஆம்புலன்சில் சுமார் 22 சடலங்களை, நெரித்து, திணித்து மயானத்து எடுத்துச் செல்லப்பட்டது. இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 48,700 பேருக்குப் பாதிப்பு உறுதியானது. மொத்த பாதிப்பு 43,43,727 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 524 பேர் உயிழந்துள்ளதுடன், இதுவரை மொத்தம் 65,284 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் 6லட்சத்துக்கு 74 ஆயிரத்து 770 பேர் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழப்பு அதிகரித்து வருவதால், இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் பீட் நகரில் உள்ள மருத்துவமனையில், இறந்த 22 கொரோனா நோயாளிகளின் உடல்களை ஒரே ஆம்புலன்சில் ஏற்றி எடுத்துச்செல்லப்பட்ட மனிதாபிமானமற்ற செயல் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

பீட் நகரில் உள்ள அம்பாஜோகோய் எனும் இடத்தில் உள்ள சுவாமி ராமானந்த் தீர்த்த கிராமப்புற அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. இங்கிருந்து ஒரே நேரத்தில் 22 உடல்களை ஒரு ஆம்புலன்சுக்குள் அடுக்கி, திணித்து, நுழைத்து எடுத்துச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இதைத்தொடர்ந்து விளக்கம் அளித்த பீட் நகராட்சித் தலைவர் ராஜ்கிஷோர், இந்த சம்பவத்துக்காக வருத்தப்படுவதாகவும், மருத்துவக் கல்லூரிக்குக் கூடுதலாக ஆம்புலன்ஸ் வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பேசுவோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க ...

  »