«  
தேடல்: 1 1

அப்படி என்ன அவசரம்..? மீண்டும் பணிக்கு திரும்பிய இளவரசர். வெளியான பரபரப்பு தகவல்..!!

 தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் பிரசவ விடுப்பில் இருந்த பிரித்தானிய இளவரசர் ஹரி ஒரு முக்கியமான விஷயம் காரணமாக மீண்டும் பணிக்கு சென்றுள்ளார்.

ஜெர்மனியில் உள்ள திஸ்ஸடோர்ப்பி என்ற நகரில் இன்விசிட்ஸ் கேம்ஸ் எனும் விளையாட்டு போட்டிகள் வருகின்ற 2023-ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த விளையாட்டு போட்டிகள் குறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிடுவதற்காகவே பிரித்தானிய இளவரசர் ஹரி பிரசவ விடுப்பிலிருந்து மீண்டும் பணிக்கு வந்துள்ளார். பிரித்தானிய இளவரசர் ஹரியால் கொண்டுவரப்பட்ட இந்த இன்விசிட்ஸ் கேம்ஸ் எனும் விளையாட்டு போட்டிகள் உறுப்புகளை இழந்த மற்றும் காயமடைந்த போர் வீரர்களுக்கான போட்டி ஆகும்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020-21-ம் ஆண்டு நடத்த முடியாமல் உள்ள இந்த போட்டிகளை பிரித்தானிய இளவரசர் ஹரி மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளார். அதன்படி நெதர்லாந்தில் உள்ள ஹூஜ் என்ற நகரில் 2022-ஆம் ஆண்டிற்கான இன்விசிட்ஸ் கேம்ஸ் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க ...

விளையாட்டால் நடந்த விபரீதம்.. தாயே குழந்தையை கொன்ற கொடூரம்!

 தாயின் விளையாட்டால் 6-வது மாடியிலிருந்து சட்டை கிழிந்து 3 வயது குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் Anna Ruzankina என்னும் தாய் தன்னுடைய 3 வயது Anastasia என்கின்ற குழந்தை அழுததால் 6 ஆவது மாடியிலிருந்து தூக்கி கீழே போடுவது போல் விளையாட்டாக மிரட்டியுள்ளார். இந்நிலையில் அந்த குழந்தையின் சட்டை கிழிந்ததால் சற்றும் எதிர்பாராதவிதமாக 6 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த Anna கீழே விழுந்த குழந்தையை தூக்குவதற்காக லிஃப்டில் சென்றுள்ளார். அதன்பின் இறந்த குழந்தையை தூக்கி கொண்டு மீண்டும் லிஃப்டில் சென்றுள்ளார். இந்தக் காட்சிகள் பதிவாகிய வீடியோவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து குழந்தையை அவருடைய தாய் கொன்றிருக்கலாம் என்னும் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் Anna வை கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் Anna விற்கு 21 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

மேலும் படிக்க ...

வாஷிங்டனில் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கஞ்சா இலவசம்

தடுப்பூசி போட்டால் கஞ்சா கிடைக்கும்...அமெரிக்காவின் பல மாநிலங்கள், லாட்டரி உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான பரிசுகளை தருவதாக கூறி மக்களை தடுப்பூசி போட அழைக்கும் நிலையில், வாஷிங்டன் மாநிலம் ஒரு படி மேலே போய் தடுப்பூசி போட்டால் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு ரவுண்டு கஞ்சா தருவதாக விளம்பரம் செய்துள்ளது.

அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. வாஷிங்டன் மாநிலத்திலும் அதே நிலைமை தான் உள்ளது. எனவே முதலில் 6 வாரங்களுக்குள் தடுப்பூசி டோசுகளை போட்டுக் கொள்பவர்களுக்கு இலவசமாக மது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

எனினும் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் வராததால் கஞ்சா வழங்கும் முடிவுக்கே அரசு வந்துள்ளது. 2012 முதல் அங்கு கஞ்சா விற்பனைக்கு சட்டபூர்வ அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

  »