«  
தேடல்: 2 2

கனடாவில் மூளையை தாக்கும் மர்ம நோயால் 6 பேர் உயிரிழப்பு

 மூளையை தாக்கும் மர்ம நோய்... உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், கனடாவில் மூளையை தாக்கும் மர்ம நோயினால் 6 பேர் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது.

இரண்டாம் அலை, மூன்றாம் அலை என கோடிக்கணக்கான மக்களை கொரோனா பாதித்து வரும் நிலையில், இந்தியாவில் பூஞ்சை தொற்று நோயினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கொரோனாவில் ஆரம்பித்து நாளுக்கு நாள் இவ்வாறான புதிய நோய்கள் மக்களை பாதித்து வருவது பெரும் அச்சத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் கனடாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய நோய் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மர்மமான மூளை பாதிப்பு நோயால் 48 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பார்வை குறைபாடு, நினைவு திறன் குறைதல், தூக்கமின்மை போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாக கூறப்பட்டு வரும் நிலையில், நோய்க்கான காரணங்களை அறியமுடிவில்லை என மருத்துவர்கள் கூறிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க ...

5 வயது குழந்தையின் உயரம்.. இணையதளத்தில் கலக்கி வரும் வாலிபர்.

 5 வயது குழந்தையின் உயரத்தை கொண்ட ஒருவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானதால் யுனிவெர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.

ரஷ்யாவில் மகச்சலா என்னும் பகுதியில் 5 வயது குழந்தையின் உயரத்தைக் கொண்ட ஹஸ்புல்லா மாகோமெடோவ் என்பவர் வசித்து வருகிறார். ஆனால் இவருக்கு தற்போது 18 வயதாகிறது. இதனையடுத்து இவருடைய உயரமும், குரலும் குழந்தை போன்றே இருப்பதால் ஹஸ்புல்லா Growth hormone குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய நாட்டு செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹஸ்புல்லா சமூக வலைதள நிறுவனமான டிக் டாக்கில் பலவிதமான காமெடி வீடியோக்களை போடுவார். இவருடைய இந்த டிக் டாக் வீடியோக்களை பார்க்கும் இணையதள வாசிகளிடம் ஹஸ்புல்லா பிரபலமான இடத்தை பிடித்துள்ளார். இதனையடுத்து இவர் சமூக வலைத்தளத்தில் குழந்தைகளுடன் சண்டையிடுவது போல் வீடியோவை பதிவிட்டுள்ளதால் இணையதள வாசிகளிடம் மிகவும் பிரபலமான இடத்தை பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து எம்.எம்.ஏ சோஷியல் மீடியா ஹிஸ்புல்லாவிற்கு இணையத்தளத்தில் மிகவும் பிரபலமான நபர் என்பதால் யுனிவர்ஸ் பட்டத்தை வழங்கியுள்ளது. இருப்பினும் இவர் குழந்தைகளுடன் விளையாடுவதை Dwarf Athletic Association என்னும் ரஷ்ய விளையாட்டு அமைப்பு கடுமையாக கண்டித்துள்ளது.

மேலும் படிக்க ...

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து தென் ஆப்பிரிக்கா பெண் உலக சாதனை

புதிய உலக சாதனை படைத்த பெண்... தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்று புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா நாட்டின் கவ்டேங் மாகாணத்தில் உள்ள டெம்பிஸா கிராமத்தைச் சேர்ந்த வர்கள் டெபோகோ சொடேட்ஸி - கோஸியாமே தமாரா தம்பதி. 7 வருடங்களுக்கு முன்பு திரு மணமான இவர்களுக்கு 6 வயதில் ஏற்கெனவே இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே, 37 வயதான கோஸியாமே தமாரா, சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் கர்ப்பம் தரித்தார். ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது கர்ப்பப்பையில் 8 குழந்தைகள் இருந்தது தெரியவந்தது. இதனால் தம்பதியினர் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், கோஸியா மேவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார் கோஸியாமே.

7 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. தற்போது தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக அவரது கணவர் டெபோகோ தெரிவித்தார். இதற்கு முன்பாக, மாலி நாட்டைச் சேர்ந்த பெண் கடந்த மாதம் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்று உலக சாதனை படைத்தார்.

தற்போது இந்த சாதனையை கோஸியாமே முறியடித்திருக்கிறார். கோஸியாமேவின் சாதனை கின்னஸ் புத்தகத்தில் விரைவில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க ...

  »