«  
தேடல்: 2 2

இவர் தான் ரியல் ஹீரோ! விண்வெளியில் சாதனை படைத்த வீரர்.

அமெரிக்கா நாட்டின் ஓஹியோ பகுதியில் கேம்பிரிட்ஜ் என்ற இடத்தில் ஜூலை 18, 1921 இல் பிறந்தவர் ஜான் க்ளேன். இவரது பெற்றோர் ஜான், கிளாரா மற்றும் சகோதரி ஜூன் ஆகியோருடன் நியூ கார்ட்டில் வசித்துள்ளார். இவர் அமெரிக்காவில் தொழிலதிபர் அரசியல்வாதி, விண்வெளி வீரர், பொறியாளர், மரைன் கர்ப்பஸ் ஏவியேட்டர் போன்ற பல்வேறு துறைகளில் பிரபலமாக வலம் வந்தார். இவர் அமெரிக்காவில் 1957ஆம் ஆண்டு முதல் சூப்பர்சோனிக் டிரான்ஸ்பர் விமானத்தை இயக்கினார்.இதனை அடுத்து 1959 ல் மெர்குரி-7 விண்வெளி பயணத்தில் ராணுவ சோதனை விமானியாக நாசாவால் தேர்ந்துடுக்கப்பட்டார். இதன் பின்பு 1962இல் மெர்குரி பயணத்தை மேற்கொண்டு பூமியின் சுற்றுப்பாதையில் 3 முறை சுற்றினார். இதனால் பூமியை சுற்றிய முதல் அமெரிக்கர் என்ற பெருமையையும் விண்வெளிக்குச் சென்ற ஐந்தாவது அமெரிக்க நபர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றார். இதனை அடுத்து 1962ல் நாசாவிடம் இருந்து சேவை பதக்கத்தையும், 1978ல் காங்கிரஸிடமிருந்து விண்வெளி பதக்கத்தையும், 1990ல் விண்வெளி வீரர் ஹால் ஆஃப் ஃபேமில் இடமும் பெற்றுள்ளார்.

இவர் 1964இல் நாசாவில் இருந்து விலகியதை தொடர்ந்து 1974 முதல் 1999 வரை சுமார் 24 ஆண்டுகளாக ஐக்கிய அமெரிக்க செனட்டராக பணிபுரிந்துள்ளார்.
இதற்கிடையில் அமெரிக்காவில் 1998இல் டிஸ்கவரி எஸ்.டி.எஸ்- 95ல் பயணித்துள்ளார். அதன் காரணமாக விண்வெளியில் பறக்கும் மிகவும் பழமையான நபர் மற்றும் மெர்குரி -7னிலும் பரந்த நபர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார். மேலும் 2012 ல் ஜனாதிபதி பதக்க சுதந்திரத்தையும் பெற்றவர். இதனையடுத்து 2016இல் தனது 95வது வயதில் ஜான் க்ளேன் உயிரிழந்துள்ளார். இப்படி விண்வெளி பயணத்தில் வரலாற்றை பதித்த இவரின் 100வது பிறந்தநாள் நாசாவால் வெகு விமர்சையாக கொண்டப்பட்டுள்ளது. அதில் கலந்துகொண்டு பேசிய லெஜெண்ட் கேத்ரின் ஜான்சன் கூறியதில் "ஜான் வாழ்க்கையில் அவரின் தைரியம், மக்களுக்காக அவர் செய்த சேவை மற்றும் அவரின் விண்வெளி பயணம் ஆகியவற்றை மக்கள் என்றும் மனதில் வைத்திருப்பர் மேலும் ஒரு நல்ல மனிதர் பூமியிலிருந்து வெளியேறிவிட்டார்" என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நாசா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்" நாசாவில் எஸ்.டி.எஸ்-95ல் பேலோட் நிபுணராகவும் , விண்வெளி பயணத்தில் ஏஜிங் செயல்முறைகளிலும் அவர் பங்காற்றி உள்ளார்"என குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க ...

இவ்வளவு விலையா..? அறிமுகமாக உள்ள பறக்கும் கார்கள்

இங்கிலாந்து நாட்டில் பறக்கும் காரை பற்றி பென்டகன் மோட்டார் குழுமம் ஆராய்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர். அதில் ஒரு பறக்கும் காரை வாங்குதல், பயன்படுத்துதல் போன்றவை ஆடம்பரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலையானது வருங்கால ரீடைல் விலை, பறக்கும் உரிமம் பெறுவதற்கான தொகை, காப்பீடு, ஸ்டோரேஜ் மற்றும் எரிபொருள் நிரப்புதல் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்த பறக்கும் காரை சொந்தமாக வாங்குவதற்கு அமெரிக்கா பணமதிப்பில் சுமார் 742,498 டாலர் செலவாகும். மேலும் முதன்முதலில் இந்த பறக்கும் கார்கள் சந்தையில் அறிமுகம் ஆகும்போது அதன் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாயாக இருக்கும்.

இந்த தொகையானது காரின் அடக்கவிலை மட்டுமின்றி எரிபொருள் பயன்பாடு, கார் பயிற்சி கட்டணம், காப்பீடு, பார்க்கிங் கட்டணம் போன்றவைகளை உள்ளடக்கியதாகும். இதற்கு உரிமம் பெறுவதற்கு 37,19௦ டாலர் செலவாகும். இந்த பறக்கும் கார்கள் ஓட்டும் முன்னனுபவம் இல்லாதவருக்கு காப்பீடு வழங்கப்பட வேண்டுமென்றால் அவரின் காப்பீட்டுத்தொகை 17,810 டாலராகும். இதனை அடுத்து பறக்கும் காரை உரிமையாக்கி கொள்ள ஆகும் விலை 693000 டாலர் செலவாகும். நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்ட PAL - V மாடல் பறக்கும் காரானது வரும் 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்துதலில் முதல் காரக இருக்கலாம். இந்த வகை கார்கள் சாதாரண ஸ்போர்ட்ஸ் கார் மாதிரி இருப்பினும் இமைக்கும் நேரத்தில் பறக்கும் வாகனமாக மாறிவிடும்.

மேலும் படிக்க ...

என்னோட மாமியாருக்கு ஒரு நல்ல பாய்பிரண்ட் வேண்டும் - மருமகள் கொடுத்த விளம்பரத்த பாருங்க!

 அமெரிக்காவை சேர்ந்த ஒரு மருமகள் தனது மாமியாருக்கு பாய்பிரெண்ட் தேவை என்று விளம்பரம் கொடுத்து இருந்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த மருமகள் ஒருவர் 40 - 60 வயது இருக்கும் தனது மாமியாருக்கு பாய் பிரண்டாக இருக்க வேண்டுமென்று அமெரிக்காவின் பிரபல விளம்பர வலைத்தளமான கிரெய்க்ஸ்லிஸ்டில் விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் அதில் பாய் பிரண்டாக வருபவர் இரண்டு நாட்களுக்கு மட்டுமே என்று ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபருக்கு 960 டாலர்கள் செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 72,000 ஆகும்.

நியூயார்க்கில் உள்ள ஹட்சனில் வசிக்கும் அந்த அந்த பெண் 51 வயதான தனது மாமியாருக்காக இந்த விளம்பரத்தை கொடுத்துள்ளார். மேலும் அந்த விளம்பரத்தில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு கட்டாயம் டான்ஸ் மற்றும் வரும்படியான பேச்சுத்திறன் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்திற்கு காரணம் மாமியார் தனிமையில் இருக்கக்கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. விளம்பரம் கொடுத்த மருமகள் தனது கணவருடன் வெளியூர் செல்ல இருப்பதால், மாமியார் தனிமையில் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணி இந்த விளம்பரத்தை கொடுத்துள்ளார். இந்த விளம்பரமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க ...

  »