«  
தேடல்: 1 1

என் காலணிகளை கூட.. அணிய முடியாமல் அங்கிருந்து வெளியேறினேன்.. அஷ்ரப் கனி.!!!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நுழைந்ததை அறிந்ததும் அந்த நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தன்னுடைய குடும்பம் மற்றும் அமைச்சர்களுடன் தலைமறைவாகி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இந்த நிலையில் அவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாடு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இக்கட்டான சூழ்நிலையிலும் கூட ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிச் சென்ற அதிபர் அஷ்ரப் கனி மீது பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ஐக்கிய அமீரகத்தில் தஞ்சமடைந்த அஷ்ரப் கனி தன்னுடைய சமூக வலைதளம் மூலமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய காலணிகளை கூட அணிய முடியாத சூழ்நிலையில் நான் வெளியேற்றப்பட்டேன். உள்ளூர் மொழி பேசத் தெரியாத சிலர் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து என்னை தேடினர். நான் வெளியேற்றப்பட்டேன். இந்த நிகழ்வுகள் மிகவும் சீக்கிரமாகவே நடந்து முடிந்துவிட்டது. அரசின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் தாலிபான்கள் இடையேயான பேச்சு வார்த்தைக்கு நான் ஆதரிக்கிறேன். மீண்டும் நான் ஆப்கான் திரும்புவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க ...

யாருமே உள்ளே நுழையவே முடியாது.. அசைக்க முடியாத 5 சிங்கங்களின் கோட்டை..!!!!!

நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காபூல் நகரில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் முயற்சியை முதற்கட்டமாக தலிபான்கள் தொடங்கினார். அதில் காபூல் அரசாங்கத்துடன் பணியாற்றிய அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று மக்கள் பலரும் தப்பியோடி வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இதுவரை அந்நியர்களால் ஆக்கிரமிக்கபடாத இடம், காபூலில் இருந்து வடக்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்ச்ஷீர் மாகாணம் தான். பஞ்ச்ஷீர் என்றால் ஐந்து சிங்கங்கள் என்று பொருள். சோவியத் யூனியன், அமெரிக்கா, தலிபான் என எந்த படைகளும் இந்த இடத்தை கைப்பற்ற முடிந்ததில்லை. அகமது ஷா மசூத் தலைமையில் 90களில் வடக்கு கூட்டணி அமைந்த போது இதுவே தலைமையிடமாக இருந்தது. தற்போது தலிபான எதிர்க்க தயாராக உள்ளது.

மேலும் படிக்க ...

வீதியில் நின்று பெண்கள் போராட்டம்.. தலிப்பான் தீவிரவாதிகளுக்கு எதிராக.. உரிமைகளைக் திருப்பி கேட்டு முழக்கங்கள்..

தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி ஆப்கானிஸ்தான் நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் அங்கு தலிப்பான்களின் ஆதிக்கத்தை பொறுக்க முடியாத காபூல் நகரை சேர்ந்த நான்கு பெண்கள் இஸ்லாமிய உடையில் கைகளில் வாசகங்கள் எழுதி வைக்கப்பட்ட சுவரொட்டிகளை வைத்துக்கொண்டு வீதியில் நின்று போராட்டம் நடத்தியுள்ளனர். அந்த சுவரொட்டியை தலிப்பான்களின் முகத்திற்கு நேராக நீட்டி எங்கள் உரிமைகளை திருப்பிக் கொடுங்கள் என்று பெண்கள் முழக்கமிட்டுக் கொண்டே இருந்தனர். ஆனால் தலிப்பான் தீவிரவாதிகள் அவர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்தவில்லை.

இந்த போராட்டம் குறித்து அந்த பெண்கள் கூறியதாவது  எங்களை எந்த சக்தியாலும் புறக்கணிக்க இயலாது. நாங்கள் பல ஆண்டு காலமாக சேர்த்து வைத்த சாதனைகள் வீணடிக்கப்படக் கூடாது. இது எங்கள் உரிமை என போராடியுள்ளனர். இதுகுறித்து தலிப்பான் தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் கூறுயதாவது பெண்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் எங்கள் இஸ்லாமிய விதிப்படி பெண்களுக்கு எல்லா உரிமைகளும் வழங்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். சமூகத்தில் எல்லா மக்களையும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் சரிசமமாக நடத்துவதே எங்கள் கொள்கை என உறுதியளித்துள்ளார். இருப்பினும் ஆப்கானிஸ்தான் நாட்டில் முக்கிய பதவிகளில் உள்ள பெண்களின் வீடுகளை தலிபான் தீவிரவாதிகள் அடையாளப்படுத்திவிட்டு சென்றது அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க ...

  »