«  
தேடல்: 2 2

காபூலில் உள்ள சிறுவர் பூங்காவில்.. குழந்தைகளாக மாறிய தலிப்பான் தீவிரவாதிகள்

 குழந்தைகள் விளையாடும் பார்க்கில் தலிப்பான் தீவிரவாதிகள் தங்களை மறந்து விளையாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளனர்.

இந்நிலையில் காபூலில் உள்ள குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் சிறுவர் பூங்காவில் தலிப்பான் தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர். அந்த பூங்காவில் அவர்கள் குழந்தைகளாக மாறி தங்களை மறந்து விளையாடும் காட்சிகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களில் தலீப்பான் தீவிரவாதிகள் பயிற்சி செய்யும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் படிக்க ...

எனக்கு நேர்ந்த அதே நிலைமை, அச்சத்தில் உள்ள ஆப்கான் பெண்கள் - மலாலா யூசுப்சாய் கருத்து தெரிவிப்பு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற முக்கிய உரிமைகள் பறிபோகும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து பெண் பிள்ளைகளின் கல்விக்காக போராடிய மலாலா யூசுப்சாய் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  கடந்த 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நுழைந்த தலீபான்களினால் அங்குள்ள பெண்கள் பள்ளிக் கூடத்திற்கு செல்வது தடை செய்யப்பட்டது.

அன்று நான் என் பள்ளி, வகுப்பறை போன்றவற்றை காண முடியாமல் போய் விடுமோ என்றும் இனிமேல் புத்தகங்களை தொட முடியாதோ என்ற அவ நம்பிக்கையும் என்னிடம் இருந்தது. அதே நிலைமைக்கு இன்று ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுமிகள், இளம் பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக அவர்களின் எதிர்கால கல்வி குறித்து கவலையளிக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இவர் தனது 15 வயதிலேயே தலீபான்களின் தடையை மீறி பள்ளிக்குச் செல்லும்போது கடந்த 2012ல் அவர்களால் சுடப்பட்டார்.

இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தாக்குதலில் இருந்து மலாலா உயிர் தப்பித்தார். இருப்பினும் அவர் முகத்தில் இன்னும் அந்த காயங்களை காண முடியும். அவர் தலீபான்களின் கோர முகத்தை நேரில் கண்டவர். கடந்த 2014ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். மேலும் பெண்களின் உரிமைக்காக சிறுவயதிலேயே தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். இதனை கண்டு தான் தலீபான்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

நான் இங்கிருந்து வெளியேற மாட்டேன் - ஆப்கானில் உள்ள இந்து கோவில்! வர மறுக்கும் அர்ச்சகர்..!!

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த ஞாயிறுகிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றினர். இதனை அடுத்து அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கை வசம் சென்றது. இதனால் அங்குள்ள உள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து கோவிலின் அர்ச்சகர் ராஜேஷ்குமார் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "இக்கோவிலில் எனது மூதாதையர்கள் பல நூற்றாண்டுகளாக சேவை புரிந்து வந்தனர். ஆகவே இந்த இடத்தை விட்டு எனது உயிரே போனாலும் நான் வெளியேற மாட்டேன்.

என்னை தலீபான்கள் கொன்றாலும் அதனை நாட்டுக்கான சேவையாகவே கருதுவேன். அதிலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடன் என்னை அழைத்தனர். அவர்களுடன் செல்ல எனக்கு விருப்பமில்லை" என்று கூறியுள்ளார். குறிப்பாக ஆப்கானில் சிறுபான்மையினராக உள்ள இந்தியர்களும் சீக்கியர்களும் இந்தியாவுக்கு வர அனைத்து உதவிகளையும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

  »