«  
தேடல்: 3 3

காஸ் அடுப்பு வெடிப்பு சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை முசுரம்பிட்டி பகுதியில் 12.01.2022 இன்றைய தினம் அதிகாலை 5.00 மணியலவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்காக காலை உணவு தயாரித்துக் கொண்டிருக்கையில் திடீரென வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் பின்னர் வீட்டில் நித்திரையில் இருந்த அனைவரும் சத்தம் கேட்டவுடன்  வீட்டிலிருந்து வெளியே ஒடிவந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

பின்னர் வெடிப்பு சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடிவந்து காஸின் ரேகுலோட்டரினை அகற்றியதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் தருமபுரம்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க ...

வவுனியாவில் உயர்தர மாணவி ஒருவரை காணவில்லை என முறைப்பாடு: பொலிசார் தீவிர விசாரணை.

வவுனியாவில் உயர்தர மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (12.01) தெரிவித்துள்ளனர்.

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் 18 வயதுடைய உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் தனியார் வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் கடந்த வியாழக்கிழமை காணாமல் போயுள்ளதாக பெற்றோரால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பட்டையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், குறித்த மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தோர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 0774935652, 0772432257, 0772608819 ஆகிய தொலைபேசி இலங்களுக்கு அறியத்தருமாறும் பெற்றோர் கோரியுள்ளனர்.

கொழும்பில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மகளாகிய குறித்த மாணவி வவுனியா நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

தென்மராட்சியின் மீசாலை அல்லாரை கிராமத்தில் 15 நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.

தென்மராட்சியின் மீசாலை அல்லாரை கிராமத்தில் 15 நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அல்லாரை பகுதியில் உள்ள வீட்டில் சேவல் ஒன்றை மலைப்பாம்பு பிடித்துள்ளது.

சேவல் கத்தும் சத்தத்தினை கேட்ட வீட்டிலிருந்தவர்கள் சென்று பார்த்த போது மலைப்பாம்பு சேவலை விழுங்க முற்பட்டுள்ளது.

இதையடுத்து வீட்டில்  இருந்தவர்கள் பெரும் முயற்சி செய்து பாம்பை பிடித்து கட்டியுள்ளனர்.

கிராமத்துக்குள் மலைப்பாம்பு புகுந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க ...

  »