«  
தேடல்: 2 2

எதிர்கால டெஸ்ட்லா…!!! இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!

மாட்டு வண்டியை எதிர்கால டெஸ்லா என கூறி அதனை ட்விட்டரில் பதிவிட்டு அதோடுகூட எலான் மஸ்க்கின் புகைப்படத்தையும் டேக் செய்து தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. அவருடைய டுவிட்டர் பதிவில் இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட வண்டியில் சிலர் படுத்து உறங்குவது போன்ற படத்தை வெளியிட்டு முற்றிலும் தானாக இயங்கக்கூடிய இந்தியாவின் எதிர்கால டெஸ்லா என பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த வண்டியை இயக்குவதற்கு கூகுள் மேப் தேவை இல்லை, எரிபொருள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை, வேலை செய்யும் இடத்தில் இருந்து வீட்டிற்கு தானாக வந்துவிடும் என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த இணையத்தள வாசிகள் பலரும் தங்களது சிறிய வயது ஞாபகங்களை பகிர்ந்துள்ளனர்.

மேலும் படிக்க ...

600,000 பவுண்ட்கள் மதிப்புடைய வீடு…. திடீரென கெட்ட பெண்ணின் அலறல் சத்தம்

லண்டனில் Bermondsey என்ற பகுதியில் 600,000 பவுண்டுகள்  மதிப்புடைய வீடு ஒன்று உள்ளது. இந்த நிலையில் திடீரென அந்த வீட்டில் இருந்து  இன்று அதிகாலை 1.40 மணி அளவில் சுமார் ஐந்து நிமிடங்கள் பெண் ஒருவர் பயங்கரமாக அலறி அடிக்கும் சத்தம் கேட்கப்பட்டுள்ளது.

இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் நுழையும் போது அவர்கள் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வீட்டின் படுக்கை அறையில்  3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் அனைவரும் கத்தியால் குத்தப்பட்ட நிலைமையில் கிடந்துள்ளனர் .

மேலும் படிக்க ...

மனித உயிரை காப்பாற்றிய பன்றி!

அமெரிக்காவில் உள்ள மோரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ பள்ளியின் மருத்துவர்கள் மருத்துவ வரலாற்றிலேயே புதிய உச்சமாக பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் என்பவருக்கு உயிரை காப்பாற்ற மாற்று இதயம் பொருத்த வேண்டியிருந்தது. ஆனால் சில மருத்துவ காரணங்களால் மனித இதயம் பொருத்துவதற்கு அவர் தகுதியற்றவராக இருந்தார்.

அதன் காரணமாக அவருக்கு இறுதி முயற்சியாக பன்றியின் இதயத்தை பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் பன்றியின் இதயத்தை அவருக்கு பொருத்தியுள்ளனர். அந்த இதயம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் உடலில் இருந்து எடுக்கப்பட்டது.

பன்றியின் உறுப்புகளை மனித உடம்பு ஏற்காமல் போவதற்கு காரணமாக இருக்கும் 3 மரபணுக்களை பன்றியின் உடலிலிருந்து மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். பன்றியின் இருதய சிசுவை தேவைக்கு மேல் வளர செய்யும் மரபணுவை மருத்துவர்கள் நீக்கியதோடு பன்றியின் உறுப்பை மனித உடல் ஏற்பதற்காக ஆறு மனித மரபணுக்களை பன்றியின் உடலில் செலுத்தியுள்ளனர். அதன்பிறகு பன்றியின் இதயம் அவருக்குப் பொருத்தப்பட்டது. தற்போது அவர் ஆரோக்கியமாக உள்ளார்.

மேலும் படிக்க ...

  »