«  
தேடல்: 2 2

பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி அவருடைய ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் பொதுசுகாதார வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்திக்கொண்டேன்.

தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டதால் நலமுடன் உள்ளேன். எனவே, தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால், செலுத்திக்கொள்ளுங்கள். பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளுங்கள். நம் சுகாதார கட்டமைப்பை பாதுகாப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க ...

ஒவ்வொரு பஃப்பிலும் விஷம் - அச்சடிக்கும் கனடா; உலகிலேயே முதல் முறை!

சிகரெட் புகைப்பதனால் ஏற்படும் உடல்நல தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகத்தை ஒவ்வொரு சிகரெட்டிலும் அச்சடிக்க கொள்கை ரீதியாக முடிவு செய்துள்ளது கனடா. இதன்மூலம் உலகிலேயே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ள முதல் நாடாக திகழ்கிறது கனடா.

கனடாவில் கடந்த 20 ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல தீங்கு குறித்த எச்சரிக்கை பதிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இருந்தாலும் இந்த எச்சரிக்கை நடவடிக்கை மக்களிடையே இப்போது வழக்கமான ஒன்றாக மாறி இருக்கலாம் என்ற காரணத்தினால் மாற்று முயற்சியை முன்னெடுத்துள்ளது அரசு. அதன்படி, ஒவ்வொரு சிகரெட்டிலும் சிகரெட் புகைப்பதனால் ஏற்படும் உடல்நல தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகத்தை அச்சடிக்க கொள்கை ரீதியாக முடிவு செய்துள்ளது கனடா.

ஒவ்வொரு பஃப்பிலும் விஷம் என்ற வாசகத்துடன் சிகரெட்டை அச்சடிக்க திட்டமிட்டுள்ளது கனடா. இது சிகரெட்டை அடிக்கடி பயன்படுத்துபவர்களை எச்சரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2023-ஆம் ஆண்டின் பிற்பாதியில் இதை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதன்மூலம் உலகிலேயே இந்த முயற்சியை முன்னெடுத்துள்ள முதல் நாடாக மாறியுள்ளது. கனடாவில் 10 சதவீத மக்கள் ரெகுலராக சிகரெட் பிடித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதை வரும் 2035 வாக்கில் பாதியாக குறைக்க விரும்புகிறது  அரசு.

மேலும் படிக்க ...

Scarborough-Rouge Park தொகுதி மக்களுக்கு ஆனந்த சங்கரி வெளியிட்ட தகவல்!

இலங்கை தமிழரான நாடாளுமன்ற உறுப்பினர் கேரி Gary Anandasangaree Canada Day தொடர்பில் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

தனது தொகுதி மக்களுக்காக ஒரு பதிவை அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், நீங்கள் Scarborough—Rouge Parkல் வசிப்பவரா? #CanadaDayவை முன்னிட்டு கனடா தினக் கொடிகள், ஊசிகள் மற்றும் பொத்தான்களை நாங்கள் இலவசமாக உங்களுக்கு வழங்குகிறோம் என்றார்.

மேலும் படிக்க ...

  »