«     »  
New Details Back to news list

விடுமுறைக்காக போன பெரியவர், விமானத்தில் இறந்த அவலம்!

பிரித்தானியா நாட்டில் உள்ள மான்செஸ்டர் நகரின் Ryanair விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று ஸ்பெயினின் Malaga நகரிற்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 84 வயதான ஒரு முதியவர் அவருடைய மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் சென்றுள்ளார். இந்த நிலையில் விமானம் 35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் பொழுது எந்தவித அசைவும் இன்றி அந்த முதியவர் இருந்ததை விமான ஊழியர்கள் கண்டுள்ளனர். அப்போது அதே விமானத்தில் பயணம் செய்த பெண் செவிலியரான Emma Gaskell அவருக்கு முதலுதவி அளித்துள்ளார்.

அதில் இதயத்துடிப்பு நின்றுள்ளதை அறிந்து 25 நிமிடங்களுக்கு cpr சிகிச்சை முறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சிகிச்சை எந்த வித பலனளிக்காததை கண்டு விமானமானது பிரான்ஸ் நாட்டில் Nantes விமான நிலையத்தில் தரையிறங்கப் பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த முதியவருக்கு மருத்துவ சிகிச்சைகள் செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியானது அவர்களின் குடும்பத்தாரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அந்த முதியவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனை அடுத்து விமானம் காலை 3 மணியளவில் malagaவில் இறங்கியுள்ளது.

Share This Post