இந்தியா, உத்தரப் பிரதேச மாநிலம் சாந்தி நகரில் குரங்குகள் கூட்டம் அதிகளவில் உள்ளன. இங்கு வசித்து வரும் கேசவ் குமார் என்பவருடைய வீட்டின் மொட்டை மாடியில் அவருடைய இரண்டு மாத குழந்தை பாட்டிக்கு அருகில் தூங்கிக் கொண்டிருந்தது.
அப்போது கதவு திறந்து கிடந்தததால் அறைக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை குரங்குகள் கூட்டம் வந்து வெளியே இழுத்துச் சென்றன. தூங்கிக் கொண்டிருந்த பாட்டிக்கு இது தெரியவில்லை. கணிவிழித்து அவர் பார்த்ததும் குழந்தையை காணவில்லை என்பது தெரியவந்துள்ளது.
உடனடியாக குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து குழந்தையை தேடியுள்ளனர். அப்போது குழந்தை தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. முன்னதாக இதேபோன்று குழந்தையை தூக்கிச் செல்ல குரங்குகள் முயன்றதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.